மெல்போர்ன் ஆஸ்திரேலியாவில் துப்புரவுப் பணியாளரை கத்தியால் குத்திய, தமிழக இளைஞர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தமிழகத்தைச் சேர்ந்த முகமது ரஹமத்துல்லா சையத் அகமது, 32, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசித்தார். அங்குள்ள ஆபர்ன் ரயில் நிலையத்தில் நேற்று காலை, துப்புரவுத் தொழிலாளியுடன் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினார்.
போலீசார் அகமதுவை கைது செய்து ஆபர்ன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அங்கு, ஸ்டேஷன் வாசலில் நின்று கொண்டிருந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளை கத்தியால் குத்த முயன்றார்.
கத்திக்குத்தில் இருந்து தப்பிக்க ஒரு போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டார். அகமது மார்பில் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து, ஆபர்ன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement