திரிபுராசட்டமன்ற தேர்தல்2023 எக்ஸிட் போல்: பாஜக சிங்கிள் டிஜிட் தண்டாது; சிபிஎம் நம்பிக்கை!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் கடந்த 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 31 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும். கடந்த 2018ல் நடந்த தேர்தலில் சிபிஎம் கட்சியின் தொடர் வெற்றிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்தது. இம்முறையும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டியது.

திரிபுரா சட்டமன்ற தேர்தல்ஆனால் திப்ரா மோதா கட்சியின் வருகையால் மும்முனை போட்டி ஏற்பட்டது. அதாவது, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 55, ஐபிஎஃப்டி 5 இடங்களில் போட்டியிட்டன. இடது முன்னணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சிபிஎம் 43, காங்கிரஸ் 13, சிபிஐ 1, ஆர்.எஸ்.பி 1, ஏ.ஐ.எஃப்.பி 1, சுயேட்சை 1 ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டன.
மும்முனை போட்டிதிப்ரா மோதா 42 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டுள்ளது. இதுதவிர திரிணாமூல் காங்கிரஸ் 28, சிபிஐஎல் 1 என தனித்தனியே போட்டியிட்டன. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகின.
இந்தியா டுடே – மை ஆக்சிஸ்பாஜக கூட்டணி 36 முதல் 45 இடங்களை பெறும். 45 சதவீத வாக்குகளை கைப்பற்றும். இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 6 முதல் 11 இடங்கள் பெறும். 32 சதவீத வாக்குகளை கைப்பற்றும். தனியாக களமிறங்கியுள்ள திப்ரா மோதா கட்சி 9 முதல் 16 இடங்களில் வெற்றி பெறும். 20 சதவீத வாக்குகளை பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிஜி – டைம்ஸ் நவ்பாஜக கூட்டணிக்கு 24 இடங்களும், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் 21 இடங்களும், திப்ரா மோதா 14 இடங்களும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெறக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஜீ நியூஸ் – மேட்ரைஸ்பாஜக கூட்டணி 29 முதல் 36 இடங்களிலும், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் 13 முதல் 21 இடங்களிலும், திப்ரா மோதா 11 முதல் 16 இடங்களில் வெல்லும் எனக் கருத்துக்கணிப்பு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜக நம்பிக்கைபெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக வெளிவந்துள்ளன. இதுதொடர்பாக பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் சுப்ரதா சக்ரவர்த்தி, தேர்தல் நடப்பதற்கு 3 மாதங்களுக்கு முன்பே கள நிலவரம் தெரியும். நிச்சயம் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். இதைத் தான் எக்ஸிட் போல் முடிவுகளும் காட்டுகின்றன. எனவே அனைத்து தலைவர்கள், நிர்வாகிகள், கட்சிகளுக்கு கேட்டுக் கொள்வது இதுதான்.
சிங்கிள் டிஜிட் தான்மாநிலம் முழுவதும் அமைதியாக இருங்கள் என்று தெரிவித்தார். அதேசமயம் இடதுசாரிகள் – காங்கிரஸ் கூட்டணியும் நம்பிக்கை உடன் காணப்படுகிறது. எக்ஸிட் போல் முடிவுகள் எல்லாம் மீடியாக்கள் செய்யும் மேஜிக். நாங்கள் நிச்சயம் பெரும்பான்மை உடன் வெற்றி பெறுவோம் என்று கூறுகின்றனர்.
திப்ரா மோதா எழுச்சிஇதுபற்றி சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் பபித்ரா கர் கூறுகையில், வாக்களிக்கும் போது மக்களின் முகங்களில் உண்மை நிலவரத்தை பார்த்தோம். எங்களுக்கு நிச்சயம் தனிப் பெரும்பான்மை கிடைக்கும். பாஜக சிங்கிள் டிஜிட்டை தாண்டாது என்றார். இதே விஷயத்தை தான் காங்கிரஸ் தரப்பும் தெரிவிக்கிறது. மறுபுறம் தொங்கு சட்டமன்றம் அமைய அதிக வாய்ப்புள்ளது. அப்போது ஆட்சியை தீர்மானிக்கும் இடத்தில் நாங்கள் இருப்போம் என திப்ரா மோதா கூறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.