நடுரோட்டில் பாஜக தலைவரை தாக்கிய பெண்கள்!! VIDEO

பாஜக தலைவரை பெண்கள் நடுரோட்டில் வைத்து தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் இரண்டு பெண்கள் ஆண் ஒருவரை செருப்பால் அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பெண் ஒருவர், ஆணின் சட்டையைப் பிடித்து சரமாரியாகத் தாக்குகிறார்.

அந்த நபர் பெண்களை பின்தொடர்ந்து வந்து தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் பா.ஜ.கவை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பா.ஜ.கவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும் தாக்குதல் நடத்திய பெண்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்கள் அதிக அளவு பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகுகிறார்கள்.

பா.ஜ.க தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளது. அக்கட்சியில் இருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருவதாகவும் கட்சியில் இருந்து விலகியவர்கள் கூறி வருகின்றனர்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.