செஸ்டர்விலே, அமெரிக்காவில், ஒகையோ மாகாணத்தில் உள்ள செஸ்டர்விலே பகுதியைச் சேர்ந்தவர் டோரதி நார்டன். இவரது ௬ வயது மகள் லில்லி, சமீபத்தில் பக்கத்து வீட்டில் தன் நண்பனுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது, அந்த வீட்டில் வளர்க்கப்படும் ‘பிட் புல்’ நாய், லில்லி மீது திடீரென பாய்ந்து கடித்து குதறியது.
உடனடியாக, பாஸ்டன் நகரில் உள்ள மருத்துவ மையத்துக்கு லில்லி அழைத்துச் செல்லப்பட்டாள். அங்கு, லில்லியின் முகத்தில் ௧,௦௦௦ தையல்கள் போடப்பட்டுள்ளன. இதையடுத்து, அச்சிறுமியால் வாயைத் திறந்து பேசக் கூட முடியவில்லை.
இந்நிலையில், ‘கோ பண்டு மீ’ என்ற நிதி திரட்டும் இணையதளத்தில், டோரதியின் குடும்ப நண்பரான பிட்சர் என்பவர், சிறுமியின் மருத்துவச் செலவுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதில் அவர், ‘லில்லியால் இனி மீண்டும் சிரிக்க முடியாத அளவுக்கு அவளின் முக நரம்புகள் சேதமடைந்துள்ளன’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement