“நித்யானந்தா துன்புறுத்தப்படுகிறார்..!" – ஐ.நா-வில் கைலாசா பிரதிநிதி பேச்சு

கடத்தல் வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நித்யானந்தா, 2019-ல் இந்தியாவிலிருந்து தப்பிச்சென்றுவிட்டார். அதோடு, தப்பிச்சென்ற நித்யானந்தா, மத்திய அமெரிக்காவில் தனித்தீவு ஒன்றை வாங்கி அதற்கு `கைலாசா’ எனப் பெயரிட்டு தனி நாடாக அவர் நிர்வகித்துவருவதாக, பல்வேறு செய்திகள் பரவின.

நித்யானந்தா

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஐ.நா-வில் நடைபெற்ற பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் குழுவின் கூட்டத்தில், `United States of Kailasa’-வின் பிரதிநிதிகள் எனப் பெண்கள் பலர் கலந்துகொண்டது தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.

இது தொடர்பான புகைப்படங்களும் வெளியானதையடுத்து, கைலாசாவை ஐ.நா அங்கீகரித்துவிட்டதா என்ற கேள்வியும் விவாதப்பொருளானது. அதேசமயம், ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட 193 நாடுகளில் `United States of Kailasa’ இல்லை என்று கூறப்படுகிறது.

ஐ.நா

இப்படியிருக்க ஐ.நா-வின் இந்தக் கூட்டத்தில், கைலாசாவின் பிரதிநிதி எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசிய விஜயப்ரியா நித்யானந்தா, “இந்து மதத்தின் முதல் இறையாண்மை கொண்ட நாடு கைலாசா. இதை நிறுவியவர், இந்து மதத்தின் உயரிய தலைவர் நித்யானந்த பரமசிவம்.

கைலாசா பிரதிநிதி

இந்து மதத்தின் பூர்வீக மரபுகள் மற்றும் வாழ்க்கை முறையைப் புதுப்பிப்பதற்காக, இந்து மதத்தின் உயரிய தலைவர் நித்யானந்தா மிகக் கடுமையான துன்புறுத்தல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகியிருக்கிறார். மேலும் இவர், தான் பிறந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டார். எனவே, நித்யானந்தா உட்பட கைலாசாவிலுள்ள இரண்டு மில்லியன் இந்து புலம்பெயர் மக்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்றார்.

மேலும் இந்தக் கூட்டத்தில், 150 நாடுகளில் கைலாசா தன்னுடைய தூதரகங்களை நிறுவியிருப்பதாக அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.