நீட் தேர்வு ரத்த நம்பாதீங்க.. பெற்றோர் ஏமார்ந்துட்டாங்க… – ஆர்.பி. உதயகுமார்

டெல்லிக்கு 2 நாள் அரசுமுறை பயணமாக சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பேத்தி திருமணத்தில் கலந்துகொண்டார். அதனை தொடர்ந்து,மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஸ்ரீகிரிராஜ் சிங்கை சந்தித்து தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர், திறன் மேம்பாடு மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கான‌ கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் மானியங்கள் குறித்து கோரிக்கை வைத்தார். கடைசியாக பிரதமர் மோடியை சந்தித்தார்.

அதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தவர் கூறியது, ”தமிழ்நாட்டின் விளையாட்டு மேம்பாடு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை குறித்து எடுத்துரைத்தேன். அடுத்த முறை கேலோ இந்தியா போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என்றும் இந்திய விளையாட்டு ஆணையம் சென்னையிலும் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன். நீட் தேர்வு ரத்து தொடர்பாக தமிழ்நாடு மக்களின் மனநிலையை குறித்து பேசினேன். தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்துவோம் என்பதையும் அவரிடம் கூறினேன். அதற்கு பிரதமர் சில விளக்கங்களை கொடுத்தார். பின்னர் நீண்ட நேரம் மனம் விட்டு என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், கோரிக்கைகளுக்கு அவர் எந்த உறுதியையும் அளிக்கவில்லை என இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் டெல்லி விசிட்டை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சூடான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து சமயம் தமிழுக்கு அவர் கொடுத்த பேட்டியில் கூறியது; நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக என்னென்ன நடவடிக்கைகளை எடுத்ததோ அதைத்தான் திமுகவும் செய்கிறது. கூடுதலாக ஒரு ஆணையத்தை அமைத்துள்ளார்கள் அவ்வளவுதான்… ஆனால், எங்களை கையாலாகாத அரசு என்று பழி சுமத்தினார்கள்.. திமுக ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகிறது.

39 எம்பிகளை வைத்துக்கொண்டு பாராளுமன்றத்தில் நீட் ரத்து குறித்து எந்த அழுத்தமும் அவர்கள் கொடுக்கவில்லை. ஆனால் காவிரி பிரச்சினை வந்தபோது பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதே நாங்கள் குரல் கொடுத்து தீர்வை பெற்றோம்… ஆனால் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் திமுக எந்த அழுத்தத்தையும் கொடுக்காமல் இருப்பது கண்துடைப்பு வேலை.. சட்டப்போராட்டம் என்று உதயநிதி சொல்வது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை.. இதை நம்பி மாணவர்களும், பெற்றோர்களும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர்.

அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு செல்லும்போதெல்லாம் திமுக விமர்சித்தது. ஆனால், டெல்லி பயணங்கள் மூலம் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டுக்கு 11 மருத்துவ கல்லூரியை பெற்று தந்தார்.. சாலை கட்டமைப்புகளை நிதி பெற்று கொடுத்தார்… மேம்பாலங்கள் கட்டமைப்புக்கு நிதி பெற்று தந்தார்… ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்து 22 மாதத்தில் ஒன்றரை லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டனர்… தமிழ்நாட்டில் நிதிநிலை வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் தெரிந்துவிடும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.