டெல்லி: இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார். தலைநகர் டெல்லிக்கு இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றுள்ளார். அவர், தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும் பஞ்சாப் மாநிலத்தின் தற்போதைய ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித்தின் பேத்தியின் திருமண […]
