மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள்; திமுக சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன?

முதல்வர்
மு.க.ஸ்டாலின்
நாளைய தினம் (மார்ச் 1) தனது 70வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி
திமுக
சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை காலை 7 மணிக்கு பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். இதையடுத்து கலைஞர்
கருணாநிதி
, தந்தை பெரியார் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.

ஸ்டாலின் பிறந்த நாள்

பின்னர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மூத்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்களின் வாழ்த்துகளை பெறுகிறார். மாலை 5 மணிக்கு சென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்ளும் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

வாழ்த்து சொல்ல ஏற்பாடு

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளுக்கு பொதுமக்களும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் திமுக ஐடி விங் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதாவது, 07127 1913 33 என்ற எண்ணிற்கு அழைத்து 30 விநாடிகளுக்கு தங்கள் வாழ்த்து செய்தியை பதிவு செய்யலாம். மேலும் selfiewithCM.com என்ற இணையதளத்தில் முதலமைச்சரின் பல்வேறு புகைப்படங்களோடு மக்கள் தங்கள் விருப்பப்படி மெய்நிகர் முறையில் செல்ஃபி எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு நடவடிக்கைகள்

இதுதவிர மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திமுக அலுவலகங்கள் நாளைய தினம் திருவிழா கோலமாக காட்சியளிக்கும். திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், சிறப்பு கட்டுரைகள் கடந்த சில நாட்களாகவே வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

ஸ்டாலின் வாழ்க்கை

மு.க.ஸ்டாலின் 01.03.1953ல் பிறந்தார். அவசர நிலை பிரகடனத்தின் போது தனது 23 வயதில் கைது செய்யப்பட்டு சிறையில் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானார். தமிழ் மொழியை காக்க திமுக மாணவரணி சார்பில் நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டார். திராவிட இயக்க சிந்தனைகளை தாங்கி பிடித்தவாறு இளைஞரணி செயலாளர், மேயர், அமைச்சர்,

திமுக ஆட்சி

துணை முதல்வர், கழக செயல் தலைவர், தலைவர், முதல்வர் என படிப்படியாக ஏற்றம் கண்டவர். தனது தலைமையின் கீழ் 2019 நாடாளுமன்ற தேர்தல், 2020 கிராமப்புற உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் சிறப்பான வெற்றியை பெற்று தந்தார். தற்போது 21 மாதங்களை கடந்து திமுக ஆட்சி சென்று கொண்டிருக்கிறது. தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செயல்படுத்த மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார்.

தமிழ்நாடு பட்ஜெட்

தொழில்துறை, கல்வி, சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகியவற்றில் நாட்டிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற இடைவிடாது உழைத்து கொண்டிருக்கிறார். இன்னும் ஓராண்டில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. இதற்கு அச்சாரம் போடும் வகையில் வரும் மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.