தென்அமெரிக்க நாடான மெக்சிகோவில் வாகனத்தில் சென்ற இளைஞர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்ததோடு, ஒருவர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மெக்சிகோ-அமெரிக்க எல்லையான நியூவோ லாரெடோ நகரில் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் தெரிவிக்கப்படாத நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ராணுவத்தினருடன் மோதலில் ஈடுபட்டனர்.
துப்பாக்கிச்சூடு விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.