எல் சால்வடார் என்ற நாட்டில் மிகப் பிரமாண்டமான சிறையைத் திறந்ததோடு அதில் 40 ஆயிரம் கைதிகளை அடைத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.
அதிக அளவில் குற்றம்
மத்திய அமெரிக்க நாடுகளிலே மக்கள் தொகையில் மிகப்பெரிய நாடாக எல் சால்வடார் என்ற நாடு பார்க்கப்படுகிறது. இந்த நாட்டின் மக்கள் தொகை கிட்டதட்ட 6.9 மில்லியன் ஆகும்.
இதனிடையே இந்த நாட்டில் அதிக அளவில் குற்றங்கள் நடப்பதாகக் கூறப்படுகிறது. அடிக்கடி கேங் வார் நடக்கும் இந்த நாட்டில் கொலை கொள்ளை எல்லாம் ரொம்ப அசால்டாக நடைபெறுகிறதாம். இது போன்ற நாடுகளில் குற்றங்கள் ஏற்படக் காரணம் வறுமை, வேலையின்மை காரணமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
ஒரே நாளில் 62 பேர் கொலை
கடந்த ஆண்டு, மார்ச் மாதத்தில் மட்டும் ஒரே நாளில் 62 பேர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்க நினைத்த அந்த நாட்டு அதிபர், நயிப் புக்கேலேவின் (Nayib Bukele) அதிரடியான உத்தரவின் பேரில், சந்தேகத்துக்குரிய நபர்கள் எனக் கருதப்பட்டவர்கள், எந்தவிதமான கைது ஆணையும், விசாரணையுமின்றி கைதுசெய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
@reuters
இதனால் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், அந்த நாட்டில் கிட்டத்தட்ட 63 ஆயிரம் ரெளடிகள் கைதுசெய்யப்பட்டனர்.
ஆட்டு மந்தைகளைப் போல் கைதிகள்
எல்சால்வடார் நாட்டின் அரசு குற்றங்களைக் குறைக்க மிகப்பெரிய சிறை ஒன்றைத் துவங்கியுள்ளது. சிசாட் என்ற பெயரில் Center for the Confinement of Terrorism (CECOT) என்ற சிறை கட்டப்பட்டு உள்ளது.
மோசமான கும்பல்களை அடைத்து வைக்க வேண்டும் என்பதற்காகவே இதைக் கட்டி வைத்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு இச்சிறையில் கேங்க் வார் செய்யக்கூடிய ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் உட்படப் பலரையும் இங்கே அடைத்து வைத்துள்ளது.
@reuters
மொட்டை அடிக்கப்பட்டு கைகள் மற்றும் கால்களைச் சேர்த்துக் கட்டிய நிலையில் கைதிகள் சிறையில் ஆட்டு மந்தைகளைப் போல் ஒருவர் பின் ஒருவராக நிற்க வைத்திருக்கிறார்கள்.
சிறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி மனித உரிமை ஆணையம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.