லண்டன் மக்களை நடுங்கவைத்த சம்பவம்… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று இளைஞர்கள்


கிழக்கு லண்டனின் ரோம்ஃபோர்ட் பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தை அடுத்து மூன்று இளைஞர்கள் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

கத்திக்குத்து தாக்குதல்

ரோம்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள Popeyes உணவகத்தில் ஏற்பட்ட கருத்து மோதலே, இறுதியில் கத்திக்குத்து தாக்குதலில் முடிந்துள்ளது.
திங்கட்கிழமை, உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 5.30 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

லண்டன் மக்களை நடுங்கவைத்த சம்பவம்... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று இளைஞர்கள் | London Horror Triple Stabbing Three Teens

@English38938960

அதிகாரிகள் மற்றும் லண்டன் ஆம்புலன்ஸ் சேவையும் சம்பவயிடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
தாக்குதலில் இலக்கான மூவரும் 15, 16 மற்றும் 17 வயதுடையோர் என பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில், மூவரும் ஆபத்து கட்டத்தில் இல்லை என தெரியவந்துள்ளது. முகக்கவசம் அணிந்த சிலர் கருத்து மோதலில் ஈடுபட்டதாகவும், இது சண்டையில் முடிந்ததாகவும் கூறுகின்றனர்.

வாள்வெட்டு குற்றங்கள்

சிலர் திடீரென்று நாற்காலிகளால் தாக்கியுள்ளனர். மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை கைது செய்துள்ளதாகவும், விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் மக்களை நடுங்கவைத்த சம்பவம்... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று இளைஞர்கள் | London Horror Triple Stabbing Three Teens

Credit: UKNIP

மற்ற வயதினரை விட பதின்ம வயதினரிடையே வாள்வெட்டு குற்றங்கள் வேகமாக அதிகரிப்பதற்கு கொரோனா தொற்றுநோய் மற்றும் நீண்ட கால ஊரடங்கும் ஒரு காரணமாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மன அழுத்தத்தில் இருக்கும் பதின்ம வயதினரை வன்முறை கும்பல் இலக்கு வைத்து, தங்களுடன் இணைத்துக் கொள்வதும் தற்போது அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தரப்பு தெரிவிக்கின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.