வளர்கிறது இந்தியா அமெரிக்கா பெருமிதம்| India is growing and America is proud

வாஷிங்டன் : ‘உலக அரங்கில், இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது’ என, அமெரிக்க மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை உதவி செயலாளர் நான்சி இஸோ ஜாக்ஸன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘ஜி – 20’ அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றிருப்பது நாட்டின் வளர்ச்சியை ஒவ்வொரு துறையிலும் வலுப்படுத்தும். இதன் வாயிலாக உலக அரங்கில் இந்தியாவின் பங்கு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அதேபோலவே அமெரிக்கா – இந்தியா இடையிலான உறவும் வலுவடைந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், ஆசிய அமெரிக்க சமூகத்தினருடன், வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி நான்சி கலந்துரையாடினார். இதற்கு, ஆசிய அமெரிக்கர்களுக்கான அதிபரின் ஆலோசனை குழு உறுப்பினர் அஜய் ஜெயின் புடோரியா ஏற்பாடு செய்திருந்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.