
விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா!
தற்போது ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தில் வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதி, இன்னும் சில ஹிந்தி படங்களிலும் நாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்தபடியாக கவுதம் மேனன் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கும் படங்களில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் இயக்கும் ‛மகாராஜா' என்ற படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆக்ஷன் கதையில் உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் நட்டி நடராஜ், முனீஸ்காந்த் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அதோடு தற்போது விஜய் சேதுபதிக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி சினிமா வரை மார்க்கெட் விரிவடைந்து இருப்பதால் இந்த படம் மூன்று மொழிகளை மையமாக வைத்து உருவாக இருக்கிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.