மதுரையில் வீடு புகுந்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
மதுரையை சேர்ந்த 13 வயதுடைய சிறுமி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்பொழுது திடீரென அத்துமீறி வீட்டுக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பின்பு அங்கிருந்து வாலிபர் தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் தனிப்படை போலீசார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது மேலவாசல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி பகுதியை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி கருப்புசாமி (31) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கருப்பசாமியை கைது செய்தனர்.