Apple iphone 15 Ultra போனில் பட்டன்களே இருக்காது! வெளியில் கசிந்த புது டிசைன்

உலகளவில் இந்த ஆண்டு வெளியாகப்போகும் ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 15 மாடலில் எந்த ஒரு நேரடி பட்டன் வசதிகளும் இல்லாத டிசைன் இடம்பெறும் என்று தெரிகிறது. பட்டனுக்கு பதிலாக Haptic Feedback மூலமாகவே நாம் அனைத்து கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ளும் வகையில் அது உருவாக்கப்படும்.

தற்போது இருக்கும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலை விட இந்த
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்
அதிக அகலம் கொண்டதாக இருக்கும். இதில் முதல் முறையாக USB Type C போர்ட் வசதி இடம்பெறும்.

All Credits: Iceuniverse

மற்றவகையில் இந்த போனில் புதிய A சீரிஸ் Bionic chip வசதி, Dynamic island, புதிய வகை கேமரா வசதிகள் இடம்பெறும். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள இந்த போனில் இரு ப்ரோ மாடல்கள் மற்றும் இரு ஸ்டாண்டர்ட் மாடல்களுடன் சேர்த்து இந்த வசதியுடன் அல்ட்ரா மாடல் வெளியாகும். மொத்தமாக ஐந்து வேரியண்ட்களில் இந்த போன் நமக்கு கிடைக்கும்.

இந்த போனை நாம்
ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்
உடன் ஒப்பீடு செய்து பார்த்தால் முதலில் நம் கண்களுக்கு தெரிவது அதன் பட்டன்கள் இல்லாத டிசைன் ஆகும். இந்த பட்டன்களுக்கு பதிலாக Haptic feedback வசதியுடன் பட்டன் இடம்பெறும். Macbook மீது இருக்கும் Trackpad போன்ற டிசைன் இதிலும் இடம்பெறும்.

ஆப்பிள் நிறுவனத்தின் Lightning Connector வசதிக்கு பதிலாக Type-C Port இடம்பெறும். மேலும் Stainless ஸ்டீல் பிரேம் பதிலாக புதிய டைட்டானியம் அலாய் பிரேம் பயன்படுத்தப்படுகிறது. ஐபோன் 15 ஸ்டாண்டர்ட் மாடல் தற்போது இருக்கும் ஐபோன் 14 ப்ரோ மாடலை போலவும் ஐபோன் 15 அல்ட்ரா மாடல் புதிய டிசைன் மற்றும் வசதிகள் உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.