Dhanush, Sir: பத்தே நாளில் விஜய்யின் வாரசுடு வசூலை முந்திய தனுஷின் சார்: இத்தனை கோடியா!

Sir beats Varasudu: தனுஷ் நடிப்பில் வெளியான சார் தெலுங்கு படம் விஜய்யின் வாரசுடு படத்தின் மொத்த வசூலை 10 நாட்களில் முந்திவிட்டது.

வாத்திவெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த வாத்தி படம் பிப்ரவரி 17ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. வாத்தியை தெலுங்கில் சார் என்கிற பெயரில் எடுத்து வெளியிட்டார்கள். தனுஷ் நடிப்பில் வெளியான முதல் தெலுங்கு படம் சார் ஆகும். தனுஷை அக்கட தேசத்து ரசிகர்கள் எப்படி ஏற்கப் போகிறார்கள் என்று நினைத்த நிலையில், அவர்களோ கொண்டாடுகிறார்கள்.
சார்அக்கட தேசத்து ரசிகர்கள் காட்டி வரும் அளவுகடந்த பாசத்தால் வாத்தியை விட சார் படம் அதிகம் வசூல் செய்து வருகிறது. சார் படம் ரிலீஸான 10 நாட்களில் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ரூ. 30 கோடி வசூல் செய்துள்ளது. வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரசுடு ரூ. 26 கோடி வசூலித்திருக்கிறது. வாரசுடுவை சார் ஓவர்டேக் செய்தது பற்றி தான் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது.
வசூல்வாத்தி, சார் ஆகிய படங்கள் இதுவரை உலக அளவில் ரூ. 93 கோடி வசூல் செய்திருக்கிறது. விரைவில் ரூ.100 கோடியை தாண்டிவிடும் என்று நம்பப்படுகிறது. அந்த சாதனை இந்த வாரமே நடந்துவிடும். வாத்தி படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 40 கோடி வசூல் செய்திருக்கிறது. கணக்கு வாத்தியாரான தனுஷ் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்காக போராடும் கதை தான் வாத்தி. அந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்தார்.
வெங்கி அட்லூரிலாக்டவுன் நேரத்தில் தான் தனுஷிடம் வாத்தி கதையை சொல்லியிருக்கிறார் வெங்கி அட்லூரி. ஏதாவது காரணம் சொல்லி நடிக்க வேண்டாம் என நினைத்திருக்கிறார் தனுஷ். ஆனால் கதையை கேட்டதுமே எத்தனை டேட்ஸ் வேண்டும் வெங்கிகாரு என கேட்டிருக்கிறார். அந்த அளவுக்கு அவருக்கு வாத்தி கதை பிடித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

​Dhanush,Vaathi: வாத்தி தனுஷ் சொன்னது அப்போ புரியல இப்போ தான் புரியுது

விஜய்வாரசுடுவை சார் முந்தியது குறித்து அறிந்தவர்களோ இது என்னய்யா விஜய்ணாவுக்கு அடிமேல் அடியாக இருக்கிறது என்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். அந்த படம் ரிலீஸுக்கு முன்பே ரூ. 400 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 42 படமோ ரூ. 500 கோடி வசூல் செய்துள்ளது. லியோவை சூர்யா 42 ஓரங்கட்டிய நிலையில் வாரசுடுவை சார் முந்திவிட்டார் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

​Suriya42: ரூ. 500 கோடிப்பு: விஜய்யின் லியோ சாதனையை தவிடுபொடியாக்கிய சூர்யா 42?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.