ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் துணிவு. ஏற்கனவே ஹெச் வினோத் இயக்கத்தில் நேர் கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களில் நடித்துள்ளார் அஜித். இந்த இரண்டு படங்களையும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர்தான் தயாரித்திருந்தார்.
Khushbu: வாவ்… கலெக்டர் லுக்கில் குஷ்பு… அசத்தல் க்ளிக்ஸ்!
இந்நிலையில் இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம்தான் துணிவு. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். மக்களிடம் வங்கிகள் நடத்தும் கொள்ளையை மைய்யப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கேன், மகாநதி ஷங்கர் , பிக்பாஸ் அமீர், பாவனி ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கடந்த மாதம் 11 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும், அதே நாளில் வெளியான விஜய்யின் வாரிசு படத்திற்கு டஃப் கொடுத்து வந்தது. இந்நிலையில் துணிவு படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி துணிவு திரைப்படம் உலக அளவில் இதுவரை 330 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samantha: ப்பா… 13 வயசுலேயே அவ்ளோ அழகு… திணறடிக்கும் சமந்தாவின் டீன்ஏஜ் போட்டோ!
துணிவு படத்தின் வசூலை பார்த்த ரசிக்ரகள் அதனை கொண்டாடி வருகின்றனர். நடிகர் அஜித் அடுத்ததாக தனது 62 வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக ஆரம்பத்தில் தகவல் வெளியானதுது. ஆனால் விக்னேஷ் சிவன் சொன்ன கதை தங்களுக்கு ஒத்து வராததால் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில் ஏகே 62 படத்திற்கான ப்ரீ புரடெக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், மார்ச் இரண்டாவது வாரத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் மார்ச் மூன்றாவது வாரத்தில் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் முன்னர் அறிவித்ததை காட்டிலும் பெரிய பட்ஜெட்டில் ஏகே 62 படத்தை உருவாக்க தயாரிப்பு நிறுவனமான லைகா முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Ajith: அஜித் என்னை 10 நிமிடம் கட்டிப்பிடித்தார்… நெகிழ்ந்துப் போன பிரபலம்!