Month: February 2023
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் துணை வேந்தருடன் பாஜக எம்.எல்.ஏ வாக்குவாதம்..!
புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மக்கள் பிரதிநிதிகள் அவமதிக்கப்பட்டுவிட்டனர் எனக் கூறி பாஜக சட்டமன்ற உறுப்பினர், துணை வேந்தருடன் மேடையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் அழைப்பிதழில் பெயர் இல்லாத ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வாலும் விழாவில் பங்கேற்றார். கிட்டத்தட்ட அரை மணி நேரமாக ராகேஷ் அகர்வால் மட்டுமே மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிய நிலையில், கோபமடைந்த பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் என்பவர், அமைச்சர்கள், எம்.பி. எம்.எல்.ஏக்களை எதற்காக அழைத்தீர்கள் என பல்கலைக்கழக துணை வேந்தரிடம் வாக்குவாதத்தில் … Read more
மூத்த குடிமக்கள் ரயில் பயணக் கட்டண சலுகை குறித்து மத்திய அமைச்சரவை முடிவு எடுக்கும்: தர்ஷனா ஜர்தோஸ் தகவல்
கரூர்: மூத்த குடிமக்கள் ரயில் பயண கட்டண சலுகை குறித்து அமைச்சரவை முடிவு எடுக்கும் என மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித் துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஸ் தெரிவித்தார். கரூர் ரயில் நிலையத்தில் மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஸ் இன்று (பிப்.28ம் தேதி) ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு முன்னதாக கரூர் ரயில் நிலைய நுழைவாயில் பகுதியில் மரக்கன்று நட்டார். தொடர்ந்து விசாரணை பிரிவு, ஒரு ரயில் நிலையம் ஒரு பொருள் … Read more
கோவையில் ஸ்டாலின் பர்த்டே ஸ்பெஷல்… செந்தில் பாலாஜி கொடுக்கும் சர்ப்ரைஸ்!
கோவை காளப்பட்டி அருகே சுகுணா ஆடிட்டோரியத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட கழக செயற்குழு கூட்டம் இன்று (பிப்ரவரி 28) நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட செயலாளர்கள், 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை கோவை மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாட வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி இதற்கு கழக நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி அறிவுறுத்தினார். … Read more
தெலுங்கு சினிமாவின் விவேக்கிற்கு பிறந்தநாள்.. போஸ்டர் வெளியிட்ட ஜெயிலர் படக்குழு!
தெலுங்கு சினிமாவின் விவேக் : தெலுங்கு சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாகவே காமெடி, கதாநாயகன் தற்போது வில்லன் என்று கலக்கி வரும் நடிகர் சுனிலுக்கு இன்று 49-வது பிறந்தநாள். சுனில் கடந்த 20 வருடங்களில் தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சிரஞ்சீவி, ரவிதேஜா, வெங்கடேஷ் தொடங்கி தற்போது இளம் கதாநாயகர் வரிசையில் இருக்கும் ராம்சரண், அல்லு அர்ஜுன் வரை நடித்துள்ளார். இதுவரை தெலுங்கு சினிமாவில் மட்டுமே நடித்த வந்த சுனில் தற்போது Pan India நட்சத்திரமாக … Read more
இந்தியாவில் 1300 ஆண்டுகள் பழமையான புத்த தூபி கண்டுபிடிப்பு!
1300 ஆண்டுகள் பழமையான புத்த தூபி ஒடிசாவின் ஜாஜ்பூரில் உள்ள கோண்டலைட் கல் சுரங்க தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சுரங்க தளத்தில், பௌமகரா வம்சத்தின் 1300 ஆண்டுகள் பழமையான புத்த தூபியை இந்திய தொல்லியல் துறை (ASI) கண்டுபிடித்துள்ளது. 4.5 மீட்டர் உயரமுள்ள இந்த தூபி ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சுகுவாபாடா குக்கிராமத்தில் உள்ள பரபாடியில் உள்ள கண்டோலைட் சுரங்க தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. Photo Credit: BISWARAN கண்டுபிடிக்கப்பட்ட … Read more
ரூ.1,300 கோடி சொத்து வரியை வசூல் செய்த சென்னை மாநகராட்சி!
சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் இதுவரை ரூ.1,300 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ள சென்னை மாநகராட்சி, சொத்து வரி கட்ட மார்ச் 31ந்தேதி கடைசி நாள் என்றும், அதற்குள் சொத்து வரி கட்டாதவர்களுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், சொத்து வரி, மின்கட்டணம், கழிவுநீர் வரி உள்பட பல வரிகளை உயர்த்தியுள்ளது. சென்னை போன்ற நகர்புறங்களில் சொத்து வரி 50 சதவிகிதம் முதல் 200 சதவிகிதம் … Read more
ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த தடை: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பரில் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 5 வருடங்களாக பல்வேறு தரப்பினரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபையில் ஜெயலலிதா மரணம் … Read more
சிறுமலர் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்: பள்ளிச் சிறுமிகளோடு இணைந்து கேக் வெட்டினார்
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிறுமலர் பள்ளியில் முதலமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. பள்ளிச் சிறுமிகளோடு இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ராஜினாமா
டெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ராஜினாமா செய்தார். டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. இதன்படி 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. புதிய கொள்கையின்படி மதுக்கடை உரிமையாளர்கள் தாங்களே விலையை நிர்ணயித்து கொள்ளவும், வாடிக்கையாளர்களுக்கு இலவசங்களை வழங்கவும், … Read more