ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிப்பு…

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக  செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை அறிவித்தார். இதையடுத்து,  தமது தரப்பில் போட்டியிடும் வேட்பாளரை இன்று மாலை 5 மணிக்கு அறிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இந்த நிலையில், இன்று மாலை 5மணி அளவில், சென்னை பசுமை வழிசாலையில் உள்ள இல்லத்தில் … Read more

என்.எல்.சிக்கு ஒருபிடி மண்ணைக்கூட தர மாட்டோம்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு

கடலூர்: குறிஞ்சுப்பாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்பு மணி என்.எல்.சி க்கு ஒரு பிடி மண்ணை கூட கொடுக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார். கடலூர் கிழக்கு மாவட்ட பாமக சார்பில் நீர்-நிலம்-விவசாயம் காப்போம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் குறிஞ்சுப்பாடியில் நடைபெற்றது. அப்போது பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விளைநிலங்களை என்.எல்.சி நிர்வாகம் கையகப்படுத்த முயற்சிப்பது ஒட்டுமொத்தமாக கடலூர் மாவட்டத்திற்கான பிரச்சனை என்று கூறினார். வேட்டியை மடித்துக் கட்டினால் என்.எல்.சி நிர்வாகத்தால் தாங்க முடியாது … Read more

குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் வெளிநாடு வாழ் இந்தியரும் இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடரலாம்: ஐகோர்ட் கருத்து

சென்னை: குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் வெளிநாடு வாழ் இந்தியரும் இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1999-ல் திருமணம் முடித்த கிரண்குமார், உஷா ஆகியோர் அமெரிக்காவில் குடியேறிய பின் விவாகரத்து பெற்றனர். 2 குழந்தைகளையும் தன்னிடம் ஒப்படைக்கவும், மனைவி தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரியும் கணவர் கிரண்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

தனி விமானத்தில் ‘விஜய் 67’

‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு தற்காலிகமாக ‘விஜய் 67’ என்று பெயரிடப்பட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க, அனிருத் இசை அமைக்கிறார். விஜய் ஜோடியாக திரிஷா …

4 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு வெளியான பட்ஜெட்; ஒன்றிய பட்ஜெட் 2023-ல் ஏழைகளுக்கு ஏதும் இல்லை: காங்கிரஸ் விமர்சனம்

டெல்லி: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள ஒன்றிய பட்ஜெட்டில் ஏழைகளுக்கு ஏதும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் 2023-24ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் இதுவாகும். 50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது … Read more

ஈரோடு இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்த இபிஎஸ்! டெல்லி பறக்கிறார் அண்ணாமலை! ஓபிஎஸ் நிலை?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தென்னரசு,  அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதற்கிடையே `தென்னரசு நன்கு அறிமுகமான வேட்பாளர்’ என பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி தேர்தல் பணிமனை இன்று அங்கு திறக்கப்பட்டது. அதில் அதிமுக தரப்பில் … Read more

வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் to டிஜிட்டல் நூலகம்! பட்ஜெட் அறிவிப்பில் 10 முக்கிய அம்சங்கள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் 10 முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம். 2023 – 24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 7 முக்கிய அம்சங்கள் அடங்கியதாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைக்கோடி மனிதருக்கும் சேவை, உள்கட்டமைப்பு, திறன் பயன்பாடு, பசுமை வளர்ச்சி, இளைஞர்நலன் உள்ளிட்ட 7 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அனைவருக்கும் அனைத்தும் என்பதை நோக்கமாக கொண்டு இப்பட்ஜெட் … Read more

ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு நேரம் பட்ஜெட் உரையாற்றினார் நிர்மலா| Nirmala Sitharaman Delivers Her Shortest Budget Speech At 87 Minutes

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 87 நிமிடங்கள் உரையாற்றினார். இது தான் அவர் எடுத்து கொண்ட குறைந்தபட்ச நேரம். 2023 – 24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பார்லிமென்டில் உரையாற்றினார். ‘அமிர்த கால கட்டத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது’ எனக்கூறி உரையை துவக்கிய நிர்மலா சீதாராமன், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது தான் நரேந்திர மோடி … Read more

2023ல் பெரிய படங்களுக்கு இசையமைக்கும் அனிருத்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத். அவரது பாடல்கள் இன்றைய இளைஞர்களை எளிதில் கவரும் விதத்தில் இருப்பதால் முன்னணி இயக்குனர்கள் சிலரும், நடிகர்கள் சிலரும் அனிருத்தை தங்களது படங்களுக்கு ஒப்பந்தம் செய்கிறார்கள். இந்த ஆண்டின் சில முக்கிய பெரிய படங்களுக்கு அனிருத் தான் இசையமைப்பாளர். ரஜினிகாந்தின் 'ஜெயிலர்', கமல்ஹாசனின் 'இந்தியன் 2' விஜய்யின் 67வது படம், அஜித்தின் 62வது படம், தனுஷின் 50வது படம் ஆகிய முக்கிய தமிழ்ப் படங்கள் அனிருத்தின் கைவசம் உள்ளன. … Read more

தாழமுக்கம் இலங்கையின் கரையை அடையக் கூடிய சாத்தியம்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது.  2023 பெப்ரவரி02ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023பெப்ரவரி 01ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாகக் காணப்படுகின்ற தாழமுக்கம் 2023 இன்று பெப்ரவரி01ஆம் திகதிகாலை வடஅகலாங்கு 8.20 N இற்கும்கிழக்கு நெடுங்கோடு 82.60 E இற்கும் அருகில்  மட்டக்களப்புக்கு கிழக்கு- தென்கிழக்காக 110 கிலோ மீற்றர் தூரத்தில் மையம்கொண்டுள்ளது. அதுமேற்கு – தென்மேற்குத் திசையில் நகர்ந்து இன்று … Read more