பழிவாங்குவதற்காக உணவில் தைலத்தை கலந்த பெண் பணியாளர் கைது.!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அருகே செண்பகனூர் பகுதியை சேர்ந்தவர் அனிஸ். இவர் மனைவி மலர்விழி அந்த பகுதியிலுள்ள கொடைக்கானல் இங்கிலீஸ் கிளப்பில் சமையல் பிரிவில் பணி புரிந்து வருகிறார்.  இவர் அங்கு, சமைக்கப்படும் மீதி உணவினை அடிக்கடி வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார். இதை அங்குள்ள பாதுகாவலர்கள் கண்டறிந்து அவரை, சமையல் பிரிவிலிருந்து மாற்றப்பட்டு வேறு பணிக்கு அனுப்பி வைத்தனர்.  இதனால் ஆத்திரமடைந்த மலர்விழி தன்னை மற்றொரு பிரிவிற்கு மாற்ற காரணமாக இருந்த பணியாளர்களை பழிவாங்க திட்டம் … Read more

"முதன்முறையா கண்ணியமான தொழில் செய்றோம்!"- சென்னையின் முதல் ட்ரான்ஸ் கிச்சன் எப்படியிருக்கிறது?

யுனைடெட் வே சென்னை மற்றும் எச்.எஸ்.பி.சி நிறுவனங்கள், ஸ்வஸ்தி அமைப்புடன் இணைந்து சென்னையில் முதல் ட்ரான்ஸ் கிச்சனைத் தொடங்கியுள்ளனர். கொளத்தூரில் அமைந்துள்ள இந்த உணவகம் ஜனவரி 18-ம் தேதி மக்களின் பரவலான ஆதரவோடு சிறப்பாகத் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.   Chennai Trans Kitchen இந்த சென்னை ட்ரான்ஸ் கிச்சன் உணவத்தில் ஐந்து திருநம்பிகள், ஐந்து திருநங்கைகள் என திருநர் சமூகத்தைச் சேர்ந்த பத்து பேர் வேலை செய்கின்றனர். இவர்கள் அனைவரும் மூன்று மாதங்களாக சமையல் கலை, உணவு … Read more

வழக்கை வாபஸ் வாங்குமாறு கூறி முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கைது!

திருச்செந்தூர் அருகே, வழக்கை வாபஸ் வாங்குமாறு கூறி முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கைது செய்யப்பட்டார். நாலுமாவடி பாதகரை சுவாமி திருக்கோயிலை நிர்வாகம் செய்வதில் அழகேசன் மற்றும் ராஜேஷ் தரப்பினர் இடையே விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அழகேசன் தரப்பைச் சார்ந்த லோகநாதன் என்ற 72 வயது முதியவர் மீது  நாலுமாவடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜேஷ் தாக்குதல் நடத்தியும், செருப்பு மாலை அணிவித்தும் மிரட்டல் விடுத்ததாக … Read more

கல்லணையில் நீர் திறக்காததால் பூதலூரில் விவசாயிகள் சாலை மறியல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் 4 பிரிவு சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர், கோயில்பத்து, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி செய்துள்ளனர். 30 நாளே ஆன இப்பயிருக்கு தற்போது தண்ணீர் தேவைப்படும் நிலையில், கல்லணையில் தண்ணீர் குறைந்தளவே வழங்கப்படுகிறது. இதனால் இக்கிராமங்களில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களின் நிலை கேள்விக் குறியாகும். இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த … Read more

மத்திய பட்ஜெட் 2023-24: பெண்களுக்கான புதிய சேமிப்புத் திட்டம் அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் 2023-24-ல் பெண்களுக்கான ஒருமுறை சேமிக்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் உரையின்போது, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான ஒருமுறை சேமிக்கும் புதிய திட்டம் ஒன்றை அறிவித்தார். புதிய திட்டமானது மகிளா சம்மான் பச்சாட் பத்ரா என்று அழைக்கப்படும். இந்தப் புதிய திட்டமானது பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரை டொபாசிட் செய்ய முடியும். இந்த புதியத் திட்டம் 2025 மார்ச் மாதம் வரை இரண்டு … Read more

ஈரோடு கிழக்கு – பொறுத்திருந்து பாருங்கள்.. மீண்டும் ட்விஸ்ட் வைக்கும் அண்ணாமலை

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தொடர்பாக எங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் ஈரோடு இடைத்தேர்தல் குறித்து என்ன பேசினோம் என்பதை வெளியில் கூறுவது நாகரிகமல்ல. இது குறித்து கொஞ்சம் பொறுமையாக இருங்கள். தி.மு.க கூட்டணியை எதிர்க்க கூடிய வகையில் இந்த கூட்டணி … Read more

பட்ஜெட் 2023: கர்நாடகாவிற்கு அடிச்ச ஜாக்பாட்… ரூ.5,300 கோடி ஒதுக்கிய பின்னணி!

2023-24 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இன்று காலை 11 மணிக்கு வாசிக்க தொடங்கிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் உரையை வாசித்து முடித்தார். இது மிகவும் குறுகிய நேரம் வாசிக்கப்பட்ட பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது. இதற்கு முந்தைய நிதியமைச்சர்கள் பலரும் 2 மணி நேரத்திற்கு மேல் உரையை வாசித்துள்ளனர். மத்திய பட்ஜெட் தாக்கல் கடந்த 2020ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் வாசித்ததே … Read more

Thalapathy 67: தம்பி, இந்த சித்து விளையாட்டுலாம் என்கிட்ட வேணாம்: லோகேஷுக்கு விஜய் போட்ட உத்தரவு

Vijay, Lokesh Kanagaraj: தளபதி 67 படம் தொடர்பாக வெளியாகியிருக்கும் லேட்டஸ்ட் தகவல் அறிந்த விஜய் ரசிகர்கள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள். தளபதி 67லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் தளபதி 67 படம் பற்றி தான் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. விஜய் நடித்து வரும் அந்த படம் தொடர்பாக தினமும் அப்டேட் வெளியாகி வருகிறது. தளபதி 67 என் படம் என்றார் லோகேஷ். அதனால் இது லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸ்(LCU) கதையாக இருக்கும் என்று கூறப்பட்டது. அப்படி … Read more

நல்லா இருந்த இடுப்புக்கு ‘இடுப்பு மாற்று சிகிச்சை’… அப்போலோ மீது குற்றம் சாட்டும் தஸ்லிமா நஸரீன்!

பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸரீன், டெல்லி அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் யத்தின் கர்பண்டா தனக்கு தவறாக சிகிச்சை அளித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ட்வீட் செய்து குற்றசாட்டுக்களை அடுக்கியுள்ளார் தஸ்லிமா நஸரீன். ஜனவரி 11 அன்று முழங்கால் வலியுடன், தஸ்லிமா நஸரீன்  அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், அங்கு டாக்டர் யதின் கர்பண்டா அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு … Read more

உஷார் மக்களே!! இங்கெல்லாம் நாளை இடி மின்னலுடன் கூடிய மழை

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று 08:30 மணி அளவில்  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து  தென்கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மெதுவாக  மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக் கூடும்.  இதன் காரணமாக, நாளை மற்றும் அதற்கு பிறகு வரும் நாட்களில் தமிழகத்துக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு … Read more