ஜம்மு காஷ்மீரில் உள்ள பனிஹால் அருகே மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு.. பாறைகள் சிதறி கல்குவாரி போல காணப்படும் தேசிய நெடுஞ்சாலை..!

ஜம்மு காஷ்மீரின் பனிஹால் அருகே மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பாறைகள் உடைந்து தேசிய நெடுஞ்சாலையில் விழுந்துள்ளதால் கல்குவாரி போல காட்சி அளிக்கின்றது சாலைகளில் கற்கள் மற்றும் பாறைகள் பெயர்ந்து விழுந்து வருவதால், சாலைகளில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாநில போக்குவரத்து போலீசாரின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் Source link

தைவானில் கிளி உரிமையாளருக்கு 74 லட்சம் அபராதம்! பின்னணியில் உள்ள காரணம்?

தைவானில் பறவையால் காயமடைந்த மருத்துவர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு 74 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கிளியால் காயமடைந்த மருத்துவர்  தைவானில் செல்லப்பிராணியான மக்கா கிளி(macaw) ஒன்றினால் மைதானத்தில் ஜாக்கிங் சென்று கொண்டு இருந்த மருத்துவர் லின் கீழே விழுந்ததில் அவருக்கு எலும்பு முறிவு மற்றும் இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான லின் நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழல் இருக்கும் நிலையில், இந்த காயத்தால் … Read more

இரண்டு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக்க கொலீஜியம் பரிந்துரை…

டெல்லி: இந்தியாவில் உச்சநீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34. ஆனால், தற்போது 27 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இரண்டு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்த கொலீஜியம், அது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல் மற்றும் குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோரின் பெயர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக உயர்த்துவதற்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் நேற்று (செவ்வாய்க்கிழமை) … Read more

கேளம்பாக்கம் அருகே ஷேர் ஆட்டோ மீது கார் மோதி 2 பெண்கள் பரிதாப பலி: 7 பேர் படுகாயம்

திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே நேற்று மாலை ஆட்டோ டிரைவரின் அவசர நடவடிக்கையால் எதிர் திசையில் வந்த கார், ஷேர் ஆட்டோமீது மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த பெண்கள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். இவ்விபத்தில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி 2 பெண்கள் பரிதாபமாக பலியாகினர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கேளம்பாக்கம் அருகே கழிப்பட்டூரைச் சேர்ந்தவர் தசரதன் (50). இவர் தனக்கு சொந்தமான ஷேர் ஆட்டோவை, நாவலூர் மற்றும் திருப்போரூர் இடையே வாடகைக்கு … Read more

நீலகிரியில் பச்சை தேயிலை கொள்முதல் விலை கிலோ ரூ.18.58 நிர்ணயம்: இந்திய தேயிலை வாரியம் அறிவிப்பு

நீலகிரி: நீலகிரியில் பச்சை தேயிலை கொள்முதல் விலை கிலோ ரூ.18.58ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் தேயிலைக்கு கொள்முதல் விலையாக தொழிற்சாலைகள் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி எங்கே?.. ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து டெல்லியில் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்..!

டெல்லி: நாடாளுமன்றத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து தமிழக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிப்பு வெளியானது. அதைத் தொடா்ந்து மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டு பிரதமா் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான நிதிகளை ஒதுக்குவதில் தாமதம் … Read more

பட்ஜெட்: வருமான வரி உச்சவரம்பில் மாற்றம்; இனி யார் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் தெரியுமா?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன் சில விவரங்கள் இங்கே: “தொலைக்காட்சி, செல்போன், கேமரா உள்ளிட்டவற்றின் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது (இதன்மூலம் அவற்றின் விலைகள் குறையலாமென எதிர்பார்க்கப்படுகிறது). வருமான வரி விலக்கு உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ. 7 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ஆகவே ஆண்டுக்கு மொத்த வருமானம் ரூ. 7 லட்சம் வரை இருப்போருக்கு இனி வருமான வரி கிடையாது. ஏற்கெனவே ரூ.5 லட்சம் வரை இருந்த இந்த வரம்பு, … Read more

2023 – 24ம் ஆண்டு பட்ஜெட்: அரசியல் தலைவர்களின் கருத்துகள் என்ன?….என்ன?| Budget 2023-24: What are political leaders views?….What?

புதுடில்லி: 2023 – 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்: மோடி பிரதமர் மோடி: நிதியமைச்சர் நிர்மலா தாக்கல் செய்த பட்ஜெட், வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட். அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட். விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரும் பயன் அடைவார்கள். வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது; வரி செலுத்தும் … Read more

'விஜய் 67'ல் இவ்வளவு நடிகர்களா? – ஒருவருக்கு 5 நிமிடமாவது கிடைக்குமா ?

'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. நேற்று இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளைப் பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியானது. இன்றும் அது தொடர உள்ளது. நேற்றைய அறிவிப்பில், “சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி, மிஷ்கின், மன்சூரலிகான், மாத்யு தாமஸ், கவுதம் மேனன், அர்ஜுன்” ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளார்கள் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இன்று படத்தின் கதாநாயகி த்ரிஷா … Read more