ஊஞ்சல் விளையாடியபோது நேர்ந்த சோகம்.! சேலையில் கழுத்து இறுகி சிறுவன் பலி.!

ஈரோட்டில் ஊஞ்சல் விளையாடியபோது சேலையில் கழுத்து இறுகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு வெங்கிடுசாமி தெரு பகுதியை சேர்ந்தவர் அமீர் அப்பாஸ். இவரது மனைவி சகிலாபானு. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை கணவன்-மனைவி இருவரும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்பொழுது மகன் சாகுல் ஹமீது (12) மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளான். இதையடுத்து, கணவன் மனைவி இருவரும் வீட்டிற்கு வந்த போது கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்துள்ளது. … Read more

“ஒன்றரை ஆண்டில் தேசிய கல்வி கொள்கை" – மத்திய கல்வித்துறை செயலர்கள் தகவல்

சென்னை தரமணியில் இருக்கும் ஐஐடி வளாகத்தில் ஜி20 கல்வி செயற்குழு மாநாடு கடந்த ஜன., 31-ம் தேதி தொடங்கியது. 3 நாள்கள் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளை சேர்ந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். சென்னை ஐஐடி-யின் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், ஜி20 நாடுகளின் நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை கொண்ட கண்காட்சியும் தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் மத்திய உயர்கல்வித்துறை செயலர் சஞ்சய் மூர்த்தி, ஐஐடி இயக்குநர் காமகோடி, தமிழ்நாடு உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட … Read more

சிதம்பரத்தில் திருநீலகண்ட நாயனார் சிலை மாயம்: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணை

கடலூர்: சிதம்பரத்தில் திருநீலகண்ட நாயனார் சிலை மாயமானது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற இளமையாக்கினார் கோயில் உள்ளது. இக்கோயில் சிவபெருமான், சிவயோகியார் வடிவத்தில் வந்து திருநீலகண்ட நாயனார், ரத்தினாசளை தம்பதியினருக்கு திருவோடு கொடுத்து இளமையாக்கியதாக வரலாறு கூறுகிறது. இந்நிலையில் கோயில் வெளிப் பிரகாரத்தில் இருந்த திரு நீலகண்ட நாயனார் – ரத்தினாசளை தம்பதியர்கள் சிலை மாயமாகியுள்ளது. இது குறித்து கோயில் டிரஸ்டி பழனியப்பா செட்டியார் இன்று (01.02.23) … Read more

வருமான வரிச் சலுகை முதல் நிதி ஒதுக்கீடுகள் வரை: மத்திய பட்ஜெட் 2023-ல் கவனம் ஈர்த்த அறிவிப்புகள்

புதுடெல்லி: 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் கவனம் ஈர்த்த அறிவிப்புகள்: பழைய வருமான வரி முறையைப் பின்பற்றுவோருக்கு, தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.50,000 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.3 லட்சம் வரை ஆண்டு வருமானம் … Read more

'எங்கள் கைகள் சும்மா இருக்காது'… சீமானுக்கு அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை..!

கலைஞருக்கு பேனா சிலை அமைத்தால் அந்த சிலையை உடைப்பேன் என்று சீமான் கூறியதற்கு திமுகவினர் சமூக வலைத்தளங்களில் சாடி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சீமானின் எச்சரிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ளார். சென்னை மெரினாவில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் எழுத்துகளை குறிக்கும் வகையில் கடலுக்குள் பேனா வடிவ தூண் எழுப்ப திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 81 கோடி செலவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வந்ததில் இருந்தே நாம் தமிழர் … Read more

Trisha, Thalapathy 67: 14 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் சேர்ந்த த்ரிஷா: க்யூட் வீடியோ

Lokesh Kanagaraj: தளபதி 67 படத்தில் த்ரிஷா நடிக்கிறார் என்பது குறித்து விஜய் மேனேஜர் வெளியிட்ட வீடியோ அனைவரையும் கவர்ந்துவிட்டது. தளபதி 67லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 67 படம் குறித்து தினமும் அப்டேட் தான். இந்த வாரம் முழுவதும் அப்டேட் வரும் என்பதால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கிறார்கள். தளபதி 67 படத்தின் ஹீரோயின் த்ரிஷா என்கிற அறிவிப்பை தான் பலரும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். இந்நிலையில் எதிர்பார்த்த அந்த முக்கிய அறிவிப்பு … Read more

Budget 2023: இணையத்தில் வைரலாகும் 30 ஆண்டு பழமையான வரி அடுக்கு

பட்ஜெட்டில் வருமான வரி அடுக்குகள்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மோடி அரசின் சார்பில் தாக்கல் செய்தார். இதில் புதிய அறிவிப்பை வெளியிட்டது, மேலும் வருமான வரி விலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்பின் கீழ், 7 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் மீதான தள்ளுபடி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த வருமானம் வரை இருக்கும் நபர் இனி வரி கட்ட தேவையில்லை. இதற்கிடையில், தற்போது 1992 ஆம் ஆண்டின் வருமான வரி அடுக்கு … Read more

நாடாளுமன்றத்தில், 2023-2024ஆம் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் தாக்கல்..

மத்திய பொது பட்ஜெட் தாக்கல் “அனைவருக்குமான பட்ஜெட் இதுவாகும்” “இந்தியா சரியான பாதையில் செல்கிறது” “ஜொலிக்கும் நட்சத்திரமாக இந்திய பொருளாதாரம் “ “இந்திய பொருளாதாரம் 5ம் இடத்திற்கு முன்னேற்றம்” “உணவு தானிய விநியோகம்: ரூ.2 லட்சம் கோடி” “11.40 கோடி விவசாயிகளுக்கு நிதி உதவி” “9 கோடி பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு” “டிஜிட்டல் வடிவில் மத்திய பட்ஜெட் தாக்கல்” “உலக நாடுகள் பாராட்டும் இந்திய பொருளாதாரம்” “5ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடு இந்தியா” “பட்ஜெட்டில் 7 … Read more

என்னைக் கொன்றது இவர்கள்தான்… ஆவியாக வந்து பிரித்தானியப் பெண்ணிடம் கூறிய கணவன்

தன்னைக் கொன்றது யார் என தன் கணவன் ஆவியாக வந்து தன்னிடம் கூறியதாகத் தெரிவித்துள்ளார் ஒரு பிரித்தானியப் பெண். நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல் பிரித்தானியாவில் தன் மனைவியான கொலீனுடன் (Coleen Campbell) வாழ்ந்துவந்த தாமஸ் (Thomas Campbell), இரண்டு மணி நேரம் சித்திரவதை செய்யப்பட்டுக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.   அவரது கொலைக்கு அவரது மனைவியான கொலீனும் உடந்தை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இந்நிலையில், தனது மாமியாரான Lynnஐ சந்தித்த கொலீன், தான் ஆவிகளுடன் பேசும் ஒருவர் மூலமாக … Read more

மத்திய பட்ஜெட் 2023-24: ஒரு ரூபாயில் வரவு-செலவு விபரம்…

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், ஒரு ரூபாயில் வரவு – செலவு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31ந்தேதி) குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில், இன்று 2வது நாள் அமர்வு நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.   இந்த பட்ஜெட் மோடி தலைமையிலான நடப்பு 5ஆண்டு கால ஆட்சியின் கடைசி … Read more