ஆண்டிமடம் பகுதியில் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும்-வியாபாரிகள் கோரிக்கை

ஆண்டிமடம் : அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஸ்ரீமுஷ்ணம் ரோட்டில் உள்ள கடைவீதி பகுதிகளில் மழைக் காலங்களில் மழை நீர் வடிவதற்கு வழியில்லாமல் நடுரோட்டில் கடை முன்பு முழங்கால் அளவு மழைநீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீமுஷ்ணம் ரோடு சண்முகா தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் தொடங்கி காடுவெட்டி பிரிவு சாலை வரை ரோட்டின் இரண்டு புறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டு அதன் மீது கான்கிரீட் சிலாப் போடும் … Read more

பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களை மாற்றுவது தொடர்பாக நிதித்துறை செயலாளர் நாளை ஆலசோனை

சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களை மாற்றுவது தொடர்பாக சென்னையில் நிதித்துறை செயலாளர் நாளை ஆலசோனை நடத்துகிறார். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உபரி ஆசிரியர்கள், பணியாளர்களை மற்ற பல்கலைக்கழகத்திற்கு மாற்றுவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை பிற்பகல் 1 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகளும் கடும் வீழ்ச்சி..!!

குஜராத்: அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகளும் கடும் வீழ்ச்சியடைந்தன. குழுமத்தின் பிரதான நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் விலை 10 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை ரூ.297 சரிந்து ரூ.2676ல் வர்த்தகம் ஆகிறது. அதானி டோட்டல் கேஸ் நிறுவன பங்கு விலை ரூ.211 குறைந்து ரூ.1897ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

வருமான வரிவிலக்கு உச்சவரம்பு முதல் டிஜிட்டல் நூலகம் வரை… பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் உரையின் சில முக்கிய அம்சங்கள் இங்கே: “ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைசி நிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, தேசத்தின் வளங்களை பயன்படுத்துதல், இளைஞர் சக்தி, நிதித்துறை உட்பட மொத்தம் 7 முக்கிய அம்சங்களில் இந்த பட்ஜெட்டில் தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ‘பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தின் கீழ் வரும் முன்னுரிமை குடும்பங்களுக்கு, அடுத்த ஒரு வருடத்திற்கு இலவச உணவு தானியங்களை வழங்கும் … Read more

பட்ஜெட் 2023; ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?| Budget 2023; How much is the budget in rupees?

புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்டில் இன்று (பிப்.,01) பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில், அதிகபட்சமாக கடன்கள் மற்றும் பிற சொத்துகள் மூலமாக 34 சதவீதமும், ஜி.எஸ்.டி மற்றும் இதர வரிகள் மூலமாக 17 சதவீதமும், வருமான வரி மற்றும் வர்த்தக வரி மூலமாக தலா 15 சதவீதமும் வருவாய் மத்திய அரசுக்கு கிடைக்கிறது. அதேபோல், அதிகபட்சமாக வட்டி கட்டுவதற்கு 20 சதவீதமும், மாநிலங்களுக்கான வரி பகிர்வுக்காக 18 சதவீதமும், மத்திய அரசின் திட்டங்களுக்காக 17 … Read more

சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ஷிவின்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் செல்ல மகளாக, சகோதரியாக மாறியிருக்கிறார் ஷிவின் கணேசன். மூன்றாவது இடத்தை பிடித்துள்ள ஷிவினுக்கு வெளியுலகில் பேராதரவு கிடைத்து வருகிறது. பிக்பாஸ் வீட்டில் நுழைந்த அனைவருக்கும் எப்படியாவது நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துவிடும். அந்த வரிசையில், ஷிவினுக்கும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. விஜய் டிவியின் ஹிட் சீரியலான 'பாரதி கண்ணம்மா' தொடர் க்ளைமாக்ஸை எட்டியுள்ள நிலையில், அதை மேலும் விறுவிறுப்பாக்கும் வகையில் ஷிவின் கணேசன் என்ட்ரி இருக்குமென்று கூறப்படுகிறது. பாரதி கண்ணம்மா தொடரில் … Read more

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று 08:30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மெதுவாக மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை இலங்கை கடற்கரை பகுதிகளை … Read more

இசை ரசிகர்கள் அதிர்ச்சி! பம்பாய் சகோதரிகளில் இளையவரான லலிதா மரணம்!

கேரள மாநிலம் திருச்சூரில் முக்தாம்பாள் மற்றும் சிதம்பரம் ஐயர் ஆகியோருக்கு மகள்களாக சி.லலிதா மற்றும் அவரது மூத்த சகோதரி சி.சரோஜா பிறந்தனர். ஆங்கிலப் பேராசிரியையாக ஆசைப்பட்ட லலிதாவுக்கு இசையில் ஆர்வம் இல்லை. சரோஜா, லலிதாவை சேர்ந்து பாடும்படி ஊக்குவித்தார். சிறு வயதில் இருந்தே இருவரும் சேர்ந்து பாடும் வழக்கத்தை தொடங்கினர். சகோதரிகள் இருவரும் பம்பாயில் மாட்டுங்காவில் பள்ளிக்கல்வி பயின்று, டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தனர். பின்னர் அவர்கள் பின்னணிப் பாடகர் ஹரிஹரனின் தந்தையான புகழ்பெற்ற எச்.ஏ.எஸ்.மணியின் வழிகாட்டுதலின் … Read more

விவசாயிகளுக்கான கடன் தொகை ரூ.20 லட்சம் கோடி..!!

2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். கம்பு , சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய திட்டம். சுற்றுலாவை மேம்படுத்த இயக்கமாக எடுத்து செயல்படுத்த மத்திய அரசு முடிவு. மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ.6 ஆயிரம் கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கான கடன் தொகை ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு. பசுமை எரிசக்தி உற்பத்திக்கு அரசு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும். 157 புதிய நர்சிங் … Read more