2023 -24 பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

2023 – 24ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடப்பதால் இன்றைய பட்ஜெட், தற்போதைய பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட் ஆகும். இந்த ஆண்டும் நாடாளுமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மக்களவையில் மடிக்கணினி மூலம் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையிலான வளர்ச்சியை உருவாக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா … Read more

இன்றும் நாளையும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் பிப்ரவரி 1,2-ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. “தென்கிழக்கு வங்கக்கடலிலும், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவாக நீடித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஜனவரி 31, 11:30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை திரிகோணமலையிருந்து கிழக்கே சுமார் 290 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது … Read more

நாகர்கோவில் | சவுதியில் ஆழ்கடல் மீன் பிடிப்பின்போது கடல் கொள்ளையர்கள் சுட்டதில் குமரி மீனவர் படுகாயம்

நாகர்கோவில்: சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழில் செய்து வந்த தமிழக மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில், குமரி மீனவர் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்த ஜெஸ்லின் என்பவர் மகன் ராஜேஷ் குமார்(37). சின்னமுட்டம் கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ, செபாஸ்டின், பெரியக்காடு கிராமத்தைச் சேர்ந்த கபிலன், திருநெல்வேலி மாவட்டம் பெருமணலைச் சேர்ந்த துரைராஜ் ஆகிய 5 மீனவர்களும் கடந்த 21-ம் தேதி சவுதி அரேபியா நாட்டில் கத்திப் … Read more

திருமலையில் அத்துமீறி மாட வீதிகளில் சுற்றி வந்த கார் – மீண்டும் தலைதூக்கிய பாதுகாப்பு பிரச்சினை

திருமலை: திருமலையில் மீண்டும் பாதுகாப்பு பிரச்சினை தலைதூக்கி உள்ளது. நிபந்தனைகளுக்கு மாறாக ஒரு கார், திருமாட வீதிகளில் நேற்று சுற்றி வந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயில் கொண்டுள்ள திருமலையில் உள்ள மாட வீதிகள் மிகவும் பவித்ரமாக, சுத்தமாக வைத்துக்கொள்ளப்படுகிறது. இந்த திருமாட வீதிகளில் பக்தர்கள் யாரும் செருப்புடன் நடக்க அனுமதி இல்லை. விஐபிக்கள் கூட திருமாட வீதியில் தேர் நிறுத்தம் உள்ள இடத்தில் தங்கள் காரை நிறுத்தப்பட்டு, அங்கிருந்து கோயிலுக்குள் செல்வது வழக்கம். ஆனால், வயதான பக்தர்கள், … Read more

Thalapathy 67: தளபதி 67 டைட்டிலை லாக் செய்த லோகேஷ்..இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே..!

லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் தற்போது தளபதி 67 படம் உருவாகி வருகின்றது. இவர்கள் கூட்டணியில் இதற்கு முன்பு வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. என்னதான் மாஸ்டர் திரைப்படம் வெற்றி பெற்றாலும் அப்படம் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் உருவாகவில்லை என்ற விமர்சனம் இருந்தது. இதையடுத்து தற்போது தளபதி 67 திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இப்படத்தில் விஜய் ஐம்பது வயது மதிக்கத்தக்க கேங்ஸ்டராக நடிப்பதாகவும், இப்படம் … Read more

Budget 2023: நாட்டில் உள்கட்டமைப்புத் துறைக்கு உள்ள எதிர்பார்ப்புகள் என்ன?

பட்ஜெட் 2023: இன்று நாட்டின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அனைத்து தரப்பினரும், சாமானியர்களும் பல வித சலுகைகளுக்காக மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர். முக்கியமாக, வரி வகைகளில் பல வித சலுகைகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. அதிகபட்ச வருமான வரி சம்பளம் பெறும் வகுப்பினரிடமிருந்தே வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் வரி வரம்பை உயர்த்தி நிதி அமைச்சர் அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது தவிர, … Read more

தென்மேற்கு இங்கிலாந்தில் வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய ஸ்டார்லிங் பறவைகள்!

தென்மேற்கு இங்கிலாந்தில் ஏராளமான ஸ்டார்லிங் பறவைகள் ஒன்றிணைந்து வானில் சாகச நடனத்தை அரங்கேற்றின. டெவ்க்ஸ்பரி நகருக்கு மேலே ஆயிரக்கணக்கான பறவைகள் ஒன்றிணைந்து விதவிதமான வடிவில் பறந்தன. குறிப்பிட்ட பகுதியில் தமக்கு அச்சுறுத்தல் உள்ளது எனத் தெரிந்ததும், ஸ்டார்லிங் பறவைகள் தங்களை தற்காத்துக் கொள்ள ஒரே நேரத்தில் வானில் எழுகின்றன என பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். Source link

இந்த ஒரு காயை சாப்பிட்டால் போதும்! எந்தவொரு நோயும் கிட்டயே நெருங்காது

பொதுவாக எல்லா காய்கறிகளிலும் எதாவது நன்மைகள் தரக்கூடிய சத்துக்கள் அடங்கியிருக்கும். அதிலும் சில காய்களில் மருத்துவ குணங்கள் ஏராளமாக கொட்டி கிடக்கும்.. அப்படியொரு காய் தான் கோவக்காய்..!  சிறுநீரகங்களின் நலம் கோவக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும். simpleindianrecipes வாரத்தில் இருமுறை கோவக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை செய்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்சனை தீரும். உடல் எடை அதிகரிப்பது ஒரு கவலைக்குரிய பிரச்சனை ஆகும். … Read more

மத்திய பட்ஜெட்2023-24: 157 நர்சிங் கல்லூரிகள், தேசிய டிஜிட்டல் நூலகம், வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.79000 கோடி நிதி, வட்டியில்லா கடன் நீடிட்டிப்பு

டெல்லி: நிதியமைச்சர் தாக்கல் செய்து வரும் மத்திய பட்ஜெட்2023-24ல்,  157 நர்சிங் கல்லூரிகள், தேசிய டிஜிட்டல் நூலகம், வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.79000 கோடி நிதி, வட்டியில்லா கடன் நீட்டிப்பு, இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், இந்தியப் பொருளாதாரம் ஒளிரும் நட்சத்திரம் என்றும், தொழிற்துறையினருக்கான பட்ஜெட் என்றும், இந்த பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூபிரிண்டாக இருக்கும்  என்றும் விவசாய கடன் … Read more

ஆண்டிபட்டியில் அரசு பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்-சமூக வலைத்தளங்களில் வைரலால் பரபரப்பு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகேயுள்ள அரசு பள்ளியில் கழிவறையை, மாணவர்கள் சுத்தம் செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ளது. 180க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் உள்பட 12 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள், பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ … Read more