கர்நாடகாவில் தனித்து போட்டி – ஆம் ஆத்மி அறிவிப்பு

பெங்களூரு: டெல்லி எம்எல்ஏவும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி சிங் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆட்சியை பார்த்து மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் 3 கட்சிகளும் தோல்வி அடைந்துள்ளன. ஊழல், வாரிசு அரசியல், தொலைநோக்கு இல்லாத திட்டங்கள் ஆகியவற்றால் அந்த கட்சிகள் மீது கோபம் கொண்டுள்ளனர். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி செயல்படுத்திய மொஹல்லா கிளினிக் போன்று ‘நம்ம கிளினிக்குகளை’ பாஜக அரசு … Read more

ஈரோடு கிழக்கு – எகிறி அடித்த எடப்பாடி: அவ்வளவு தானா ஓபிஎஸ் மவுசு?

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு ஓபிஎஸ்ஸுக்கு சாதகான அரசியல் நகர்வுகளுக்கு வழிவகுக்கும் என்று சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் உண்மையில் ஓபிஎஸ்ஸின் பலம் என்ன என்பதை அவருக்கே காட்டும் விதமாக இந்த தேர்தல் அறிவிப்பு அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இது தான் ஜெயலலிதா ஸ்டைல்!எந்த தேர்தல் என்றாலும் முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்து எதிர் கட்சிகளுக்கு மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளுக்கே ஷாக் கொடுப்பது தான் ஜெயலலலிதா ஸ்டைல். கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே அத்தனை … Read more

Dancer Ramesh Death: அந்த ஒரு மணிநேரம் எங்க போன? இன்பவள்ளிக்கு டான்ஸர் ரமேஷின் மனைவி சித்ரா கிடுக்கிப்பிடி!

டான்ஸர் ரமேஷ் மரணம் தொடர்பாக அவரது முதல் மனைவி சித்ரா பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார். டான்ஸர் ரமேஷ் மரணம்பிரபல நடன கலைஞரான டான்ஸர் ரமேஷ் கடந்த வெள்ளிக் கிழமை தனது பிறந்த நாளில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. டான்ஸர் ரமேஷுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி சித்ராவுக்கும் ரமேஷுக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்குமே திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் டான்ஸர் ரமேஷ், இன்பவள்ளி என்பவருடன் சென்னை புளியந்தோப்பில் உள்ள … Read more

Jio 5G இப்போது தமிழகத்தில் மேலும் 8 நகரங்களில் அறிமுகம்!

டிஜிட்டல் துறையில் புதிய ஒரு வளர்ச்சியாக 5G இணைய சேவை கடந்த ஆண்டு அக்டோபர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த 5G சேவையை இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்கள் வழங்குகின்றன. அதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை பொறுத்தவரை இந்த 5G சேவை என்பது இந்தியாவில் 2023 டிசம்பர் மாதத்திற்குள் முழுவதும் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. அதில் ஏற்கனவே இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்தையும் 5G சேவை மூலம் இணைத்துவிட்டது. தற்போது 2ஆம் கட்ட … Read more

2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் டெல்லியில் இன்று காலை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து, சற்றுநேரத்தில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கலாகிறது நாடாளுமன்றத்தில் காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்துக்கு விமானப்படை லாரியில் பட்ஜெட் ஆவண நகல்கள் கொண்டு வரப்பட்டன நாடாளுமன்ற வளாகத்தில் … Read more

முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹரி… மன்னரின் தீர்மானம்: அச்சத்தில் இளவரசர் வில்லியம்

மன்னர் சார்லஸ், தனது முடிசூட்டுவிழாவில் தன் இளைய மகன் ஹரியும், மருமகள் மேகனும் பங்கேற்றேயாகவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இளவரசர் ஹரி தரப்பின் நிலை மன்னர் சார்லசின் முடிசூட்டு விழா, வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெற உள்ளது. முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வது தொடர்பில் இதுவரை ஹரி, மேகன் தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மன்னரின் தீர்மானம் மன்னர் சார்லசைப் பொருத்தவரை, அவர் தனது இளைய மகன் ஹரியையும், மருமகள் மேகனையும் தனது … Read more

கடலுக்குள் பேனா சிலை எதுக்கு? கோபாலபுரம் வீட்டில் வைக்கலாமே! சவுக்கு சங்கர் காட்டம்!

சென்னை: கடலுக்குள் பேனா சிலை எதுக்கு? என கேள்வி எழுப்பியுள்ள சவுக்கு சங்கர், ‘துணிவு வசூலை எடுத்து பேனா சிலை வைக்கலாம், முரசொலி அறக்கட்டளை பணத்தைக்கொண்டு, கோபாலபுரம், வேளச்சேரி, உளுந்தை கிராமம் போன்ற உங்களுக்கு சொந்தமான இடங்களில். இதை விட பெரிய பேனா சிலை வைக்கலாமே. பேனா என்ன, பால் பாண்ட் சிலையே வைக்கலாமே! என காட்டமாக விமர்சித்தார். ஜிஸ்கொயர் என்ற தனியார் நிறுவனத்தை விமர்சித்ததாக கூறிய புகாரின் பேரிலும், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காகவும், காவல்துறையினரால்  கைது … Read more

பைபர் படகில் டீசல் தீர்ந்ததால் கடலில் தத்தளித்த நாகை மீனவர்கள் 4 பேர் கரை திரும்பினர்..!!

நாகை: கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்று கரை திரும்ப முடியாமல் தத்தளித்த 4 மீனவர்கள் கரை திரும்பினர். பைபர் படகில் டீசல் தீர்ந்ததால் கடலில் தத்தளித்த நாகை மீனவர்கள் சக மீனவர்கள் உதவியோடு கரை திரும்பினர்.

பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் காலவரையற்ற போராட்டம்

சென்னை: பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். திமுக தேர்தல் வாக்குறுதிப்படி 12,400 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் முன்னேற்ற ஒருங்கிணைப்பு குழு டிஜிபி வளாகத்தில் போராட்டம் தொடங்கியுள்ளது.

2023 – 24ம் நிதியாண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

டெல்லி: 2023 – 24ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று 5வது முறையாக ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடப்பதால் இன்றைய பட்ஜெட், தற்போதைய பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட் ஆகும். இந்த ஆண்டும் நாடாளுமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மக்களவையில் மடிக்கணினி மூலம் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி … Read more