Thalapathy 67: தளபதி 67 அப்டேட்டால் செம பயத்தில் விஜய் ரசிகர்கள்

Sanjay Dutt: தளபதி 67 படம் தொடர்பாக வெளியான அறிவிப்புகளை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் கவலையில் இருக்கிறார்கள். தளபதி 67வாரிசு படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தளபதி 67. அந்த படம் தொடர்பாக தினமும் அப்பேட் வெளியிடுகிறார்கள். நேற்று முன்தினம் வெளியான அப்டேட்டை பார்த்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்தார்கள். இதையடுத்து நேற்று மாலை வெளியான அப்டேட்டுகளை பார்த்த ரசிகர்களுக்கு கவலை வந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. அறிவிப்பு … Read more

சீன தூதரக கடிதத் தலைப்பில் வெளியான போலி கடிதம் குறித்து விசாரணை

சீன தூதரக கடிதத் தலைப்பில் வெளியான போலி கடிதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் தொகைகளுக்கு தவணை வழங்க முடியாது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த போலிக் கடிதம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக சீனத் தூதரக அதிகாரியொருவர், அமைச்சருக்கு அறிவித்துள்ளார். வெளியான போலி கடிதம் சீனத் தூதரகத்தின் அதிகாரபூர்வ கடித தலைப்பில் கடந்த 18ம் திகதி இடப்பட்டு இந்த போலி கடிதம் வெளியிடப்பட்டுள்ளது என … Read more

பட்ஜெட்டில் அதிக வார்த்தைகள் பேசியது யார் தெரியுமா…? – சுவாரஸ்ய தகவல்கள்

Tradition & Trivia Of Union Budget: மத்திய பட்ஜெட் என்பது வெறும் புள்ளிவிவரங்கள் அல்லது வரிவிதிப்பு விதிகள் மட்டுமல்ல, அதற்கென்று ஒரு பாரம்பரிய பக்கமும் உள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய நாட்களில் ஒன்றான பட்ஜெட், தாக்கல் போது சில விதிகள் உள்ளன. அல்வா தயாரிப்பதில் இருந்து, எடுத்துச் செல்லப்படும் ஆவணங்கள், பேச்சு, அச்சிடும் இடம் மற்றும் பலவற்றிற்கு, பல வரலாறுகள் உள்ளன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பிரதமர் மோடி அரசின் இரண்டாவது ஆட்சியின் கடைசி … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிப்பு…

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுடை இடைத்தேர்தலில்  அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் என கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. … Read more

கொடைக்கானல் – வத்தலகுண்டு சாலையில் 300 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல்: கொடைக்கானல் – வத்தலகுண்டு பிரதான சாலையில் 300 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரியில் இருந்து 4 பேர் படுகாயமடைந்தனர்.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், தஞ்சை, திருவாரூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!!

டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

"எனக்கு வேறொருவருடன் ஏற்கெனவே திருமணமாகிவிட்டது"- கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட பெண் வீடியோ

தென்காசியில் தன் வீட்டாரால் கடத்தப்பட்டு பின் தேடப்பட்டு வந்த புதுமணப்பெண்ணின் வழக்கில், மணமாணவருடன் தான் நலமாக இருப்பதாக வீடியோ வெளியீட்டுள்ளார் அப்பெண். சில தினங்களுக்கு முன்னர் தென்காசி அருகே வேறு ஒரு சமூகத்தை சேர்ந்தவரை  காதல் திருமணம் செய்ததால், மணமகன் கண்முன்னேயே மணமகளை அவரது வீட்டாரேவும் தூக்கிச் சென்ற அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்தது. அதைத்தொடர்ந்து பெண்ணின் தந்தை உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அப்பெண்ணை கண்டறிய 5 தனிபப்டைகள் அமைத்து … Read more

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வீட்டிற்கு டிபன் சாப்பிடவும் தான், உங்க தலைவர்கள் போனாங்களா?| Speech, interview, report

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேட்டி: யாரையும் தேடிப் போய் கூட்டணிக்கு அழைக்க வேண்டிய நிலை, அ.தி.மு.க.,விற்கு இல்லை. நாங்கள் யாருக்கும் எஜமானரும் இல்லை; அடிமையும் இல்லை. ஈரோடு தேர்தலில் மக்கள், பழனிசாமி பக்கம் உள்ளனர். அப்ப, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் வீட்டிற்கு டீ சாப்பிடவும், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வீட்டிற்கு டிபன் சாப்பிடவும் தான், உங்க தலைவர்கள் போனாங்களா? பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: மேட்டூர் அணையில் … Read more

மத்திய பிரதேச சரணாலயத்தில் புதிதாக பிறந்த 5 புலிக்குட்டிகள்..!

மண்ட்லா, மத்திய பிரதேச மாநிலத்தில் கன்ஹா தேசிய புலிகள் சரணாலயம் உள்ளது. இங்கு டிஜே என்னும் 9 வயது பெண் புலி சமீபத்தில் 5 குட்டிகளை ஈன்றது. தற்போது அவை ஆரோக்கியத்துடன் பூங்காவை சுற்றி நடமாடி வருகின்றன. இதனை ஆர்வமுடன் காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் பூங்காவுக்கு வருகிறார்கள். மத்திய பிரதேசத்தில் கடந்த 2018-ம் ஆண்டு புலிகள் எண்ணிக்கை கணக்கெடுப்பின்படி 526 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு கணக்கெடுப்பின் முடிவு இன்னும் வெளியாகவில்லை. இதனால் மத்திய … Read more