அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் ஹெம்ப்ஸ்டெட்நகரில் உள்ள லிடோ கடற்கரையில் நேற்று முன்தினம் காலை ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணிக்கு திமிங்கலம் உயிருடன் கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து மீட்பு குழுவினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் திமிங்கலத்தை மீட்டு கடலுக்குள் விடுவதற்காக அங்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் திமிங்கலம் செத்தது. இதனையடுத்து, மீட்பு குழுவினர் 35 அடி நீளம் கொண்ட அந்த ராட்சத திமிங்கலத்தை … Read more

இந்த ரணகளத்திலேயும்… அதானி வாங்கிய மிகப்பெரிய துறைமுகம் – எவ்வளவு தெரியுமா?

வணிக நிறுவனமான அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, இஸ்ரேலின் மிகப்பெரிய சர்வதேச துறைமுகங்களில் ஒன்றான ஹைஃபா துறைமுகத்தை கையகப்படுத்தியுள்ளார். அந்த வகையில், இஸ்ரேலில் தொடர்ந்து அவர் முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதானி போர்ட்ஸ் (APSE.NS) மற்றும் உள்நாட்டு இரசாயனங்கள் மற்றும் தளவாட நிறுவனமான கடோட் ஆகியவை இணைந்து 4 பில்லியன் ஷெக்கல்கள் (1.15 பில்லியன் அமெரிக்க டாலருக்கு) இந்த துறைமுகத்தை வாங்கியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 9,658 கோடியாகும்.  ஹைஃபா துறைமுகத்தை வாங்கியதை அடுத்த … Read more

உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனம்; மேலும் 2 பெயர்களை பரிந்துரைத்த கொலீஜியம்

உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனம்; மேலும் 2 பெயர்களை பரிந்துரைத்த கொலீஜியம் Source link

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீதான அவதூறு வழக்கு ரத்து.!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ந் தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பற்றி அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மனு ஒன்றுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை … Read more

அரசுப் பேருந்துகள் உள்பட 9,00,000 வாகனங்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் தடை..!!

சாலைகளில் ஓடும் மிகவும் பழைய, கரும்புகை மூலம் மாசு ஏற்படுத்தும் வாகனங்களை கழித்துக்கட்டுவதே ‘பழைய வாகன அழிப்புக்கொள்கை’யின் நோக்கமாகும். ஸ்கூட்டர், பைக், கார் உள்ளிட்ட தனி நபர் வாகனங்கள் 20 ஆண்டுகளும் லாரி உள்ளிட்ட வர்த்தக வாகனங்கள் 15 ஆண்டுகளும் ஓடியிருந்தால் அவை கட்டாயம் பரிசோதனைக்குள்ளாக்கப்பட வேண்டும். அவ்வாகனங்கள் மோசமான நிலையில் இருந்தால் அழிப்புக்கு அனுப்ப அதிகாரிகள் பரிந்துரை செய்வார்கள். அவ்வாகனங்கள் பயன்பாட்டுக்கு உரியவை என தெரியவந்தால் கூடுதலாக 5 ஆண்டுகாலம் சாலைகளில் இயங்க அனுமதிக்கப்பட்டு பிறகு, … Read more

நெஞ்சை உலுக்கும் மரணம்..!! சர்க்கரை நோயால் உயிரிழந்த 8 மாத குழந்தை..!!

நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பால்ராஜ். இவரது மனைவி கார்த்திகா. இவர்களுக்கு ரூபி (3), மரியா ஆரோனிக்கா (8 மாத குழந்தை) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மரியா ஆரோனிக்காவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஆரோனிக்காவை பெற்றோர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆரோனிக்காவை மருத்தவர்கள் பரிசோதனை செய்தனர். அதில் ஆரோனிக்காவுக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்தது. இதை … Read more

ஜார்க்கண்ட் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து: 10 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்த சோகம்

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் உள்ள ஆசிர்வாத் டவர் என்னும் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்துக்கொண்டது. உடனே தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் 40 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. கட்டடத்தில் சிக்கிக்கொண்டவர்கள் மீட்கப்பட்டு வெளியில் கொண்டு வரப்பட்டனர். 10 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தவிர தீ விபத்தில் சிக்கி 10 பெண்கள், 3 குழந்தைகள் என … Read more

கொடைக்கானல் மலைப்பகுதியில் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு தென்பட்ட பச்சை வால் நட்சத்திரம்.. கண்டுகளித்த பொதுமக்கள்!

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமி சுற்றுவட்ட பாதையில் வரும் பச்சை வால் நட்சத்திரத்தை பொதுமக்கள் கண்டுகளித்தனர். பரந்த வான்வெளியில் சிறிய மாற்றங்களைக் கூட கண்டறியும் ஜுவிகி தொலைநோக்கி மூலம் இந்த பச்சை வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டது. நள்ளிரவு 12 மணி முதலே வானில் தென்பட்ட இந்த பச்சை வால்  நட்சத்திரத்தை வீட்டில் இருந்த படியே பொதுமக்கள் கண்டுகளித்தனர், அதனை தொடர்ந்து அடுத்து 4 மாதங்களும் வெவ்வேறு கால நிலைகளில் இந்த நட்சத்திரத்தை பார்க்கலாம் … Read more

11 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையில் இன்று கரையை கடப்பதால்,டெல்டா உட்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும். இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று கூறியதாவது: காற்றழுத்த தாழ்வு மண்டலம்: ஜன.31-ம் தேதி (நேற்று) பகல்11.30 மணி நிலவரப்படி, இலங்கையின் திரிகோணமலையில் இருந்து கிழக்கே சுமார் 290 கி.மீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு – தென்கிழக்கே சுமார் 510 கி.மீ. தொலைவிலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த … Read more

குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற உத்தராகண்ட் மாநிலத்தின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு

புதுடெல்லி: குடியரசு தின விழாவை முன் னிட்டு, டெல்லியில் கடந்த மாதம் 26-ம் தேதி அணிவகுப்பு நடந்தது. இதில் பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மற்றும் பல மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்தி கள் இடம்பெற்றன. இதில் உத்தரா கண்ட் மாநில அரசின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு கிடைத்தது. இந்த அலங்கார ஊர்தியில் உத்தராகண்ட் மாநிலத்தின் வன விலங்குகள் மற்றும் பறவைகள் இடம் பெற்றிருந்தன. அலங்கார ஊர்தியின் முன் பகுதியில் கார்பட் தேசிய பூங்காவின் … Read more