Thalapathy 67: உலகநாயகனுக்கு நோ சொன்ன தளபதி..காரணம் இதுதான்..!

விஜய் தற்போது வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடித்து வருகின்றார். மாஸ்டர் படத்திற்கு பிறகு இவர்கள் இணையும் தளபதி 67 படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. அதற்கு மிகமுக்கிய காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் தான். உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து அவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதையடுத்து அவர் விஜய்யுடன் இணைகிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு இரட்டிப்பானது. Thalapathy 67: தளபதி 67 படத்தின் … Read more

13 மணிநேரப் பயணத்திற்கு பின் புறப்பட்ட இடத்திலே தரையிறங்கிய விமானம்

துபாயிலிருந்து நியூசிலாந்துக்கு சென்று கொண்டிருந்த எமிரேட்ஸ் விமானம், 13 மணிநேர பயணத்திற்குப் பிறகு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியதால், பயணிகள்  அவதிக்குள்ளாகினர். துபாயில் இருந்து கடந்த ஜனவரி 27ந் தேதி புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம், ஆக்லாந்து நகரில் நிலவும் மோசமான வானிலை மற்றும் கனமழை காரணமாக மீண்டும் திருப்பி விடப்பட்டது. சற்று நேரத்தில் தரையிறங்குவோம் என எதிர்பார்த்துக் காத்திருந்த பயணிகள், மீண்டும் துபாயிலேயே கொண்டுவந்து இறக்கிவிடப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர். Source link

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்

புதுடெல்லி: மத்திய அரசின் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யவுள்ளாா். அவா் தாக்கல் செய்யும் 5-ஆவது நிதிநிலை அறிக்கையாகவும், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய பாஜக அரசின் கடைசி முழுநேர நிதிநிலை அறிக்கையாகவும் இது அமையும். இந்த பட்ஜெட் காகிதமில்லா … Read more

பல்லடம் அருகே இரும்பு உருக்கு ஆலையில் தீ விபத்து

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூரில் தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான இரும்பு உருக்கு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

வி.சி.க. நிர்வாகி கொலை: பாஜக பிரமுகர் கைது

திருவாரூர்: திருவாரூர் அருகே வி.சி.க. நிர்வாகி கவியரசன் நேற்று கொல்லப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகர் காளிதாஸ் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.திருக்கண்ணமங்கையில் வி.சி.க. நிர்வாகி கவியரசன் நேற்று 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

2023-24 நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: 2023-24 நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இன்று 5வது முறையாக ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் பூமியின் அருகே வளம் வரும் அதிசய வால் நட்சத்திரம்

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன், பூமியில் வாழ்ந்த நியாண்டர்தால் மனிதர்கள் பார்த்த வால் நட்சத்திரத்தை, நமது தலைமுறையும், பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மர்மங்களுக்கும், வியப்பிற்கும் தட்டுப்பாடு இல்லாத நமது பிரபஞ்சத்தில் நடக்கும் அதிசயங்கள் ஏராளம். அதில் ஒன்றாக ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காடுகள் மற்றும் குகைகளில் வாழ்ந்த, நியாண்டர்தால் மனிதர்கள் பார்த்ததாக சொல்லப்படும் பச்சை வால்நட்சத்திரம் ஒன்று, தற்போது பூமியின் சுற்றுவட்டார பாதைக்கு மிக அருகில் கடந்து வருகிறது. இந்நிலையில், இதன் நகர்வை கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகம் … Read more

அட்லீ – பிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, ‛ராஜா ராணி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. தொடர்ந்து விஜய்யை வைத்து ‛‛தெறி, மெர்சல், பிகில்'' என மூன்று படங்களை கொடுத்த இவர் தமிழில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது ஹிந்தியில் ஷாரூக்கானை வைத்து ‛ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். அட்லீக்கும், ‛சிங்கம்' உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்த பிரியாவிற்கும் காதல் மலர்ந்தது. கடந்த 2014ல் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். 8 ஆண்டுகளுக்கு பின் … Read more

ஒடிசா மந்திரியை கொலை செய்யும் நோக்கத்துடனே சுட்டார் – முதல் தகவல் அறிக்கையில் தகவல்

புவனேஸ்வர், ஒடிசா மாநில சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த நாபா கிஷோர் தாஸ், உதவி சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தாஸ் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நிலையில், பிரஜ்ராஜ்நகர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கு மந்திரியை கொலை செய்யும் தெளிவான நோக்கம் இருந்தது என்று பிரஜ்ராஜ்நகர் போலீஸ் நிலைய பொறுப்பு இன்ஸ்பெக்டர் பிரதும்ன்ய குமார் ஸ்வைன் கூறியுள்ளார். ஆனால், கொலைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அதே சமயத்தில், உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கு சிகிச்சை … Read more