'இந்திய மண்ணில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடாதது நல்லதுதான்' – ஆஸ்திரேலிய வீரர் சுமித்

சிட்னி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. பொதுவாக இது போன்ற முக்கியமான தொடர்களுக்கு முன்பாக வெளிநாட்டு அணிகளுக்கு சம்பந்தப்பட்ட உள்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள், இங்குள்ள சூழலில் பழகி தங்களை தயார்படுத்துவதற்காக பயிற்சி போட்டிகளில் விளையாட ஏற்பாடு செய்து கொடுப்பது உண்டு. ஆனால் தற்போதைய டெஸ்ட் தொடர் … Read more

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு; 10 பேர் படுகாயம்

வாஷிங்டன், அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நடக்கும் பயங்கர துப்பாக்கி சூடு சம்பவங்கள் அந்த நாட்டை அதிரவைத்து வருகிறது. கடந்த 23-ந் தேதி கலிபோர்னியா, அயோவா மற்றும் இல்லினாய்ஸ் மாகாணங்களில் ஒரே நாளில் நடந்த வெவ்வேறு துப்பாக்கி சூடு சம்பவங்களில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் புளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள லேக்லேண்ட் நகரில் அயோவா அவென்யூ என்கிற இடத்தில் மக்கள் … Read more

கோயம்பேடு மார்க்கெட்.! (01.02.2023)இன்றைய காய்கறி விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 01/02/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல். மகாராஷ்டிரா வெங்காயம் 20/18/16 ஆந்திரா வெங்காயம் 14/12 நவீன் தக்காளி 20 நாட்டு தக்காளி 20/18 உருளை 23/18/15 சின்ன வெங்காயம் 60/40/30 ஊட்டி கேரட் 30/25 பெங்களூர் கேரட் 20 பீன்ஸ் 25/23 பீட்ரூட் ஊட்டி 25/23 கர்நாடக பீட்ரூட் 15/13 சவ் சவ் 12/10 முள்ளங்கி 14/12 முட்டை கோஸ் 8/6 வெண்டைக்காய் 60/40 … Read more

சௌதியில் குமரி மீனவர் மீது துப்பாக்கிச் சூடு.. ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

சௌதியில் குமரி மீனவர் மீது துப்பாக்கிச் சூடு.. ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் Source link

சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் நல்லோருக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு..!!

இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகரித்தபடியே வருகிறது.. அதிலும், விபத்தில் சிக்கி உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாமல் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து காணப்படுகிறது.சாலை விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நல்லெண்ண தூதுவர்களுக்கு அவர்கள் செய்யும் ஒவ்வொரு உதவிக்கும் பரிசாக ரூ.5000 வழங்கி கவுரவிக்கப்படும் என்று புதுச்சேரி மாநில போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள … Read more

`எங்களை கிள்ளுக்கீரைன்னு நினைச்சீங்களா; அடக்கிப் பேசுறேன்’ – மேயரிடம் கொதித்த திமுக கவுன்சிலர்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம், மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முத்துசெல்வம் – அன்பழகன் கூட்டத்தின் போது திருச்சி மாநகராட்சியின் 57-வது வார்டு கவுன்சிலரான முத்துசெல்வம், “டெண்டர் நோட்டீஸே எங்களுக்கு கொடுக்காம நீங்க எப்படி டெண்டரை நடத்தலாம். டெண்டர்ல எத்தனை பேர் கலந்துக்கிட்டாங்க… எங்களை … Read more

அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து தரமான கல்வியை உருவாக்க வேண்டும் – ஜி20 கல்வி மாநாட்டில் சென்னை ஐஐடி இயக்குநர் வலியுறுத்தல்

சென்னை: நிலையான வளர்ச்சிக்கு கல்விதான் சிறந்த கருவியாகும். அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து தரமான கல்வியை உருவாக்க வேண்டும் என்று ஜி20 கல்வி மாநாட்டில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி வலியுறுத்தினார். உலக அளவில் பொருளாதாரத்தில் நிலவும் சிக்கல்களை தீர்ப்பதற்காக ஜி-20 அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் அமெரிக்கா, சீனா, இந்தியா, கனடா உள்ளிட்ட 20 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 2022-23-ம் ஆண்டு மாநாட்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் 50 … Read more

மக்களை குழப்புகிறது மத்திய அரசு – முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மால்டா: குடியுரிமை திருத்த சட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து குடியேறிய இந்து, சீக்கியர், புத்தமத்தினர், ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வழி செய்கிறது. இச்சட்டத்தின் கீழ், விதிமுறைகளை அரசு இன்னும் வகுக்கவில்லை. இந்தச் சட்டத் திருத்தத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் கடந்த 1950-ம் ஆண்டுகளில் வங்கதேசத்திலிருந்து மதுவா இனத்தினர், மதரீதியான துன்புறுத்தல் காரணமாக மேற்கு வங்கத்தில் குடியேறினர். இந்நிலையில், மேற்குவங்கத்தின் மால்டாவில் நேற்று நடந்த … Read more

Jharkhand Fire Broke Out: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 10 பெண்கள் உள்பட 13 பேர் பலி!

Jharkhand Fire Broke Out: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்றிரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தெரியவரவில்லை என ஜார்க்கண்ட் தலைமை செயலர் சுக்தேவ் சிங் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 10 பெண்கள், மூன்று குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த விபத்தை அடுத்த பிரதமர் … Read more

முக்கிய தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து அமெரிக்கா-இந்தியா பேச்சுவார்த்தை

தொழில்நுட்பத் துறையில் சீனாவுக்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் ஒத்துழைப்பை அதிகரித்துள்ளன. முக்கியமான தொழில்நுட்பத்துறையின் முன்னேற்றத்தை இந்தியாவுடன் பகிர்ந்துக் கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை இந்தியா-அமெரிக்க அதிகாரிகள் இடையே இந்த வாரத்தில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டில் பிரதமர் மோடியும் அதிபர் ஜோ பைடனும் சந்தித்துப் பேசிய பின்னர் இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர நட்பும் நம்பிக்கையும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அணு ஆயுதங்களை தாங்கும் ஏவுகணைகளையும், ஜெட் விமானங்களையும் விண்கலன்களையும் இயக்கப் பயன்படும் முக்கியமான மைக்ரோ சிப்களையும் தொழில்நுட்பத்தையும் … Read more