மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் கேலோ இந்தியா என்ற பெயரில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்!
மத்தியப் பிரதேசம் மாநிலம் குவாலியரில் கேலோ இந்தியா என்ற பெயரில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. பிப்ரவரி 10 வரை நடைபெறும் இப்போட்டியில் பேட்மின்டன், ஹாக்கி, ஜிம்னாஸ்டிக்ஸ், கலியாப்பட்டு ஆகிய நான்கு விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. பேட்மிண்டன் போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 64 வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஸ்பான்சர்கள் மூலம் சிறந்த விளையாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டதாக பேட்மின்டன் வீரர் அபிநவ் தாக்கூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். Source link