பாகிஸ்தான், சீனாவில் பயிற்சி பெற்ற தீவிரவாதி மும்பையில் ஊடுருவலா?

மும்பை:  தேசிய புலனாய்வு அமைப்புக்கு கடந்த  ஞாயிறன்று மர்மநபரிடம் இருந்து இமெயில் ஒன்று வந்தது  அதில் தீவிரவாதி என  சந்தேகப்படும் இந்தூர் நகரின் தார் ரோடு பகுதியை சேர்ந்த மர்மநபர்  மும்பைக்குள் ஊடுருவியுள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது ஆபத்தான அந்த  நபர் பெயர் சர்பராஷ் மேமன் என்பதும் சீனா, ஹாங்காங், பாகிஸ்தான்  ஆகிய நாடுகளில் பயிற்சி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது இமெயிலுடன் அவரது ஆதார்  கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றில் இடம்பெறும்  தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளது. அந்த நபர் பற்றிய … Read more

காஷ்மீர் பண்டிட்டை சுட்டுக் கொன்ற பயங்கரவாதி அதிரடியாக கொலை| The terrorist who shot Kashmiri Pandit was killed in action

ஸ்ரீநகர், ஜம்மு – காஷ்மீரில், வங்கி காவலராக பணியாற்றிய பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தவரை கொன்ற பயங்கரவாதி உட்பட இருவரை, பாதுகாப்புப் படையினர் நேற்று சுட்டுக் கொன்றனர். ஜம்மு – காஷ்மீரின் புல்வாமாவில் இருக்கும் அச்சன் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் சர்மா. பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த இவர், வங்கி ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த ௨௬ம் தேதி தன் வீட்டுக்கு அருகில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்றபோது பயங்கரவாதியால் சுடப்பட்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு … Read more

அடுத்தப்பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ஜி

'பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முன் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான படம் ‛பகாசூரன்'. செல்வராகவன், நட்டி எனும் நட்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களை இந்தப்படம் பெற்றது. இந்நிலையில் தனது அடுத்தப்பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மோகன் ஜி. இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு : “இவர் யார் எனத் தெரிகிறதா? காசி கங்கா ஆர்த்தியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எல்லா கடவுள்களையும் வணங்குபவர் ரிச்சர்ட் ரிஷி. அப்புறம், முக்கியமான … Read more

ஐ.நா. நிகழ்வில் நித்யானந்தாவின் கைலாசா பிரதிநிதிகள்.. என்ன பேசினார்கள்?

ஐ.நா. நிகழ்வில் நித்யானந்தாவின் கைலாசா பிரதிநிதிகள்.. என்ன பேசினார்கள்? Source link

திருட்டு பைக்கில் பயங்கர ஆயுதங்கள்; கொலைசெய்யச் சென்ற கும்பல் போலீஸில் சிக்கியது எப்படி?!

சென்னை, பெரியமேடு காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியான மூர் மார்க்கெட் சந்திப்பில், நேற்று போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே சந்தேகத்துக்கிடமான வகையில்,  இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்களை போலீஸார் மடக்கிப் பிடித்து, விசாரணை செய்தனர். அதில், அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் சீட்டில் 6 கத்திகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. திடீரென அந்த 3 நபர்களும் ஓட முயற்சி செய்ய, போலீஸார் அவர்களை விரட்டிப் பிடித்தனர். பின்னர், பெரியமேடு காவல் நிலையத்தில் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்வைத்து கரூர் மாநகராட்சி கூட்டத்தில் வாக்குவாதம்

கரூர்: கரூர் மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர், இடைத்தேர்தல் குறித்து வாழ்த்து தெரிவித்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கரூர் மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக்கூட்டம் மேயர் கவிதா தலைமையில் மாநகராடசி அலுவலக கூட்டரங்கில் இன்று (பிப். 28ம் தேதி) நடைபெற்றது. துணை மேயர் சரவணன், ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாதாரண கூட்டத்தில் 73, அவசர கூட்டத்தில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவசரக்கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக கவுன்சிலர்கள் பிறந்த நாள் … Read more

ஜனாதிபதியை படுகொலை செய்ய திட்டம்! உண்மைத் தன்மை குறித்து பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பு

புதிய இணைப்பு ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பில் தனியார் வானொலி அலைவரிசை ஊடாக இன்று (28.02.2023) காலை வெளியிட்ட செய்தி முற்றிலும் பொய்யானது என பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவ்வாறான செய்திகள் எதுவும் பதிவாகவில்லை எனவும், அவ்வாறான விசாரணைகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் இது தொடர்பான செய்திகள் குறித்து பொலிஸார் தனித்தனியாக விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முதலாம் இணைப்பு ஜனாதிபதி ரணில் … Read more

எல்லை பதற்றம் நீடிக்கும் நிலையில், இந்தியா வரும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்..!

எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில், ஜி20 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கின் கேங் (Qin Gang) இந்தியா வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வரும் மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் அம்மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விடுத்த அழைப்பின் பேரில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் 2ஆம் தேதியன்று கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.  Source link

'நீங்கள் தகுதியானவர்' மெஸ்ஸியை வாழ்த்திய ஜாம்பவான் ரொனால்டோ! வைரலாகும் வீடியோ

FIFA-வின் சிறந்த விருது வழங்கும் விழாவில் பிரேசிலிய ஜாம்பவான் ரொனால்டோ நசாரியோ (Ronaldo Nazario) லியோனல் மெஸ்ஸியை (Lionel Messi) வாழ்த்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. திங்கள்கிழமை மாலை பாரிஸில் நடந்த ஒரு விழாவில் மெஸ்ஸி இரண்டாவது முறையாக ஃபிஃபாவின் சிறந்த வீரர் (FIFA’s The Best Men’s Player) விருதை வென்றார். மெஸ்ஸியிடம் ரொனால்டோ நசாரியோ என்ன சொன்னார்? FIFA ரொனால்டோ நசாரியோ மெஸ்ஸியை கட்டிப்பிடித்து, “உலகக் கோப்பைக்கு வாழ்த்துகள், எவ்வளவு அழகாக … Read more

மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை தொடர பரிசீலிக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்

கரூர்: கரூரில் ஒன்றிய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஸ் நேற்று அளித்த பேட்டி: இந்தியாவில் 100 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. இதில் கரூர் ரயில் நிலையமும் ஒன்று. கொரோனா காலத்தில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. இந்த சலுகை தொடர பரிசீலனை செய்யப்படும். கரூரில் இருந்து சென்னைக்கு நேரடியாக ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.