மே.வங்கத்தில் மூச்சு திணறலுக்கு 5 குழந்தைகள் பரிதாப பலி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இருவேறு அரசு மருத்துவமனைகளில் அடினோ வைரசால் பாதிக்கப்பட்ட, 9 மாத குழந்தை உள்பட 5 குழந்தைகள் சுவாசத் தொற்றினால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். இதில் 2 குழந்தைகள் கொல்கத்தா அரசு மருத்துவமனையிலும், 3 குழந்தைகள் பிசி ராய் அரசு குழந்தை நல மருத்துவ அறிவியல் கல்லூரியிலும் சிகிச்சை பெற்று வந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், இறந்த குழந்தைகளின் மருத்துவப் பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னரே இது உறுதிபடுத்தப்படும் என்று அதிகாரிகள் … Read more

வெப்பத்தை சமாளிப்பது எப்படி? சுகாதார அமைச்சகம் விளக்கம்!| How to deal with the heat? Ministry of Health explanation!

புதுடில்லி, கோடையில் ஏற்படும் வெப்ப அலையை சமாளிப்பது குறித்த அறிவுறுத்தல்களை மத்திய சுகாதார அமைச்கம் வெளியிட்டுள்ளது. வழக்கமாக மார்ச் மாதத்திலிருந்து தான் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பிப்ரவரி மாத துவக்கத்திலேயே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தாண்டும் சில மாநிலங்களில் பிப்ரவரியிலேயே கடும் வெயில் அடித்தது. இதன் காரணமாக பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அடுத்து வரும் மாதங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடை … Read more

விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா!

தற்போது ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தில் வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதி, இன்னும் சில ஹிந்தி படங்களிலும் நாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்தபடியாக கவுதம் மேனன் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கும் படங்களில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் இயக்கும் ‛மகாராஜா' என்ற படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி … Read more

சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் சென்ற வாகனம் விபத்து! உடல் நசுங்கி பலியான மாணவன்! பலர் படுகாயம்!

விழுப்புரம் அருகே கடகனூர் சாலையில், ’டாடா ஏஸ்’ வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் வந்த 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சென்ற நிலையில் பலர் படுகாயம்; ஒருவர் உயிரிழந்துள்ளார். இரவு 8.30 மணிக்கு நடந்த இந்த விபத்தில் உயிரிழந்த மாணவன், சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஷாமுவேல் என்பது தெரியவந்துள்ளது.  மேலும், உயிரிழந்த மானவன் சென்னை லயோலா கல்லூரி மாணவன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து … Read more

2022- ன் சிறந்த கால்பந்து வீரராக மெஸ்ஸி தேர்வு!

2022- ம் ஆண்டில் கால்பந்தில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த வீரர், வீராங்கனைகளை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு வாக்கெடுப்பு முறையில் தேர்வு செய்துள்ளது. ஃபிஃபா அமைப்பின் 211 உறுப்பு நாடுகளுடன் ரசிகர்களும் ஆன்லைன் முறையில் வாக்களித்தனர். இதில் பிரான்சின் எம்பாப்பே, கரிம் பென்சிமா ஆகிய வீரர்கள் இறுதிச் சுற்றில் முறியடித்து, மெஸ்ஸி சிறந்த வீரராகத் தேர்வானார். கடந்த 14 ஆண்டுகளில் மெஸ்ஸி 7-வது முறையாக சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அர்ஜெண்டினா அணி … Read more

“நித்யானந்தா துன்புறுத்தப்படுகிறார்..!" – ஐ.நா-வில் கைலாசா பிரதிநிதி பேச்சு

கடத்தல் வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நித்யானந்தா, 2019-ல் இந்தியாவிலிருந்து தப்பிச்சென்றுவிட்டார். அதோடு, தப்பிச்சென்ற நித்யானந்தா, மத்திய அமெரிக்காவில் தனித்தீவு ஒன்றை வாங்கி அதற்கு `கைலாசா’ எனப் பெயரிட்டு தனி நாடாக அவர் நிர்வகித்துவருவதாக, பல்வேறு செய்திகள் பரவின. நித்யானந்தா இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஐ.நா-வில் நடைபெற்ற பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் குழுவின் கூட்டத்தில், `United States of Kailasa’-வின் பிரதிநிதிகள் எனப் பெண்கள் பலர் கலந்துகொண்டது தற்போது … Read more

திமுக கூட்டத்தில் வெடித்த ‘சர்ச்சை ஆடியோ’ பேச்சு – குரல்கொடுத்த கவுன்சிலரிடம் வாக்குவாதம் செய்த சக நிர்வாகிகள்

சேலம்: சேலத்தில் நேற்று நடந்த திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜாதி ரீதியாக இழிவுபடுத்தி பேசிய மாநகர அவைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குரல் கொடுத்த கவுன்சிலரை கட்சி நிர்வாகிகள் வளையமிட்டு காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து கொண்டாடிட வேண்டி, சேலம் மாநகர, மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் பொது உறுப்பினர்கள் கூட்டம் கலைஞர் மாளிகையில் நடந்தது. இக்கூட்டத்தில் … Read more

அரியலூரில் கற்பழிப்பு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு

அரியலூர்: அரியலூர் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை கற்பழித்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஜெயராமனின் மகள் வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கூலித் தொழிலாளி ஜெயராமனுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவரின் மூன்றாவது மகள் அரியலூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வந்திருக்கிறார். இந்நிலையில் உஞ்சினி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன்(22) என்பவர் கடந்த … Read more

காலை, மாலை நேரங்களில் கடும் கூட்டம்: பெட்டிகள் பற்றாக்குறையால் திணறும் பாசஞ்சர் ரயில்கள்: பயணிகள் திண்டாட்டம்

நெல்லை: நெல்லையை மையமாக கொண்டு செங்கோட்டை, திருச்செந்தூருக்கு இயக்கப்படும் ரயில்களில் பெட்டிகள் பற்றாக்குறை காரணமாக கடும் கூட்டம் காணப்படுகிறது. செங்கோட்டை- மயிலாடுதுறை பாசஞ்சர் ரயிலில் பெட்டிகள் மிக குறைவு காரணமாக பயணிகள் நின்று கொண்டே பயணிக்கின்றனர். கொரோனா காலத்திற்கு பின்னர் ரயில்வேயில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி தொலை தூரங்களுக்கு செல்லும் பாசஞ்சர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. குறுகிய தூரத்தில் செல்லும் பாசஞ்சர் ரயில்களும் மீண்டும் இயக்கப்பட்டபோது கட்டணங்கள் இரு மடங்காக உயர்ந்தன. இதனால் பயணிகள் … Read more