தொன்மையான 146 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க தமிழ்நாடு வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை: தொன்மையான 146 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க தமிழ்நாடு வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. வல்லுனர்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணி துவங்கும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

ஒரு மாநிலத்தின் அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்: உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்

டெல்லி: ஒரு மாநிலத்தின் அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என  உச்சநீதிமன்றம் மீண்டும் கூறியுள்ளது. பஞ்சாப் சட்டமன்றத்தை கூட்ட மறுப்பதாக அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு ஆளுநரின் செயல்பாட்டுக்கு மறைமுகமாக கண்டனம் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுப்படி சட்டப்பேரவையை கூட வேண்டியது ஆளுநரின் கடமை என உச்சநீதிமன்றம் கூறியது. ஆளுநர் கேட்ட சில … Read more

புஷ்பா-2 படத்தின் மாஸ் அப்டேட்!

நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் புஷ்பா பாகம் 1. செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவான இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்கள் மற்றும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு … Read more

நீண்ட ஆயுளோடு, ஓங்கு புகழோடு வாழ வேண்டும்; ஸ்டாலினுக்கு பிரபலங்கள் வாழ்த்து

நீண்ட ஆயுளோடு, ஓங்கு புகழோடு வாழ வேண்டும்; ஸ்டாலினுக்கு பிரபலங்கள் வாழ்த்து Source link

நீலகிரி | முஸ்லிம், இந்து, கிருஸ்துவ மதத்தை சேர்ந்த 400 ஜோடிகளுக்கு தலா 5 பவுன் தங்க நகை, ரூபாய் 25 ஆயிரம் ரொக்கம்!

நீலகிரி : கூடலூரில் மர்கஸ் ஜமாத் மூலமாக முஸ்லிம், இந்து, கிருஸ்துவ 400 ஜோடிகளுக்கு அவர்கள் மத வழக்கப்படி ஜமாத் மூலமாக திருமணங்கள் நடத்திவைக்கப்பட்டுள்ளது.  திருமண ஜோடிகளுக்கு தலா 5 பவுன் தங்க நகைகளும், ரொக்கம் ரூபாய் 25 ஆயிரமும் ஜமாத் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்ட எஸ்ஒய்எஸ் (மர்கஸ் ஜமாத்) அமைப்பு சார்பில் சார்பில் மணமக்களுக்கு இலவச சமுதாய திருமணங்கள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று (27.02.2023) நடைபெற்ற ஐந்தாவது சமுதாய திருமண நிகழ்ச்சியில் முஸ்லிம், இந்து, … Read more

"இங்கேதான் என் வாழ்க்கை தொடங்கியது!"- வான்கடே ஸ்டேடியத்தில் தன் சிலை அமைவது குறித்து சச்சின்

கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை தன் வசமாக்கிப் புகழ்பெற்ற நட்சத்திர வீரராக, ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் சச்சின். 1998ம் ஆண்டு 15வது வயதில் மகாராஷ்டிர மாநிலம், மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்பித்த அவரது கிரிக்கெட் பயணம், அவரது 39வது வயதில் 2012ம் ஆண்டு அதே வான்கடே மைதானத்தில் கண்ணீருடன் விடைபெற்றது. வான்கடே மைதானம் கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்த சச்சின் வரும் ஏப்ரல் 24ம் தேதி தனது ஐம்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். இந்நிலையில் … Read more

கும்மிருட்டில் மூழ்கிக் கிடக்கும் மதுரை சாலைகள்: வெளிச்சம் கொடுக்குமா மாநகராட்சி?

மதுரை: மதுரை மாநகரின் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ள சாலைகளில் இன்னும் தெருவிளக்குகள் எரியாததால் நகரப்பகுதிகள் மக்கள் நடமாட முடியாமலும், வாகனங்களில் செல்ல முடியாமலும் இருட்டில் மூழ்கிக் கிடக்கிறது. தமிழ்நாட்டின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான மதுரை தற்போது போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்றியும் சிக்கித் தவிக்கிறது. 2011ல் மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு, 3 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள், 11 கிராமப் பஞ்சாயத்துகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, வார்டுகளின் எண்ணிக்கை 100ஆக உயர்த்தப்பட்டது. இதனால் 55 … Read more

இலங்கையில் வெளிநாட்டு பெண்ணை துன்புறுத்திய கணவர் – பொலிஸ் நிலையம் சென்ற மனைவி

புலத்சிங்கள பிரதேசத்தில் தனது இலங்கை கணவர் துன்புறுத்தல் செய்வதாக கூறி 2 பிள்ளைகளின் தாயான பிலிப்பைன்ஸ் பெண் பொலிஸ் அவசர இலத்திற்கு நேற்று அழைப்பேற்படுத்தியுள்ளார். அதன் பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு வந்த பெண் மீண்டும் தனது கணவருடன் வாழ வீட்டிற்கு செல்ல முடியாதென கூறி பொலிஸாரிடம் பாதுகாப்பு கோரியுள்ளார். புலத்சிங்கள கதன்வாடிய 50 ஏக்கர் பிரதேசத்தில் வசிக்கும் நபர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் பிலிப்பைன்ஸில் தொழிலுக்கு சென்ற சந்தர்ப்பத்தில் அந்த நாட்டு பெண்ணுடன் காதல் தொடர்பு … Read more

'ஏ… இந்தாமா' மார்டன் மங்கையிடம் மயங்கினாரா நடிகர் மாரிமுத்து… உண்மை என்ன?

Actor Marimuthu Issue: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலம் சமூக வலைதளங்களில் பரவலாக அறியப்படுபவர் நடிகர் மாரிமுத்து. இவர் வெள்ளித்திரையில் பிரபலமடைவதற்கு முன்பே இவர் திரைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமானவராக இருந்தார். பைரவா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பிரபலமான படங்களிலும் இவர் நடித்திருந்தார்.    இவரின் துல்லியமான தமிழ் உச்சரிப்பும், மிடுக்கான உடல்வாகும் பலரையும் கவர்ந்தது என்றே கூறலாம்.  ஆனால், இவர் நடிகராவதற்கு இயக்குநராக இரண்டு படங்களை இயக்கியுள்ளார். 2000இல் கண்ணும் கண்ணும் … Read more

மதுரை எய்ம்ஸ்-க்கு ரூ.12 கோடி தானா…? – துருவிய செய்தியாளர்கள் ; சமாளித்த வானதி சீனிவாசன்

மதுரை மாநகர் நேதாஜி சாலை பகுதியில்  நேற்று (பிப். 27) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”பிரதமர் மோடியின் திட்டத்தில் பயன்பெற்ற ஒரு கோடி பயனாளிகளுடன் செல்பி என்ற நிகழ்ச்சியை மதுரையில் தொடங்கிவைத்துள்ளேன்.  மத்திய அரசின் அதிகளவிற்கு பெண் பயனாளிகள்தான் உள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டவர்களிலும் பெண் பயனாளிகள்தான் அதிகம். பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் அடிப்படையில் பெண்களை மையப்படுத்தி ஆட்சியை … Read more