அடேங்கப்பா..இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி, சிலிண்டர் விலை உயர்வு

வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் வர்த்தக சிலிண்டர்களின் விலையில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த எட்டு மாதங்களுக்கு பின், மானியமில்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை, 50 ரூபாய் உயர்ந்துள்ளது. முன்னதாக வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை 6 ஜூலை 2022 முதல் ஒரே நிலையில் தான் இருந்துள்ளது. அதேசமயம், வர்த்தக சிலிண்டர்களின் நுகர்வோர் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். ஏனெனில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.350 வரை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று மார்ச் 1ஆம் தேதி என்பதால், விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.50 உயர்ந்து 1118.50 க்கு விற்பனையாகிறது. அதேசமயம், வணிகரீதியான எல்பிஜி சிலிண்டர் டெல்லியில் ரூ.1769க்கு பதிலாக ரூ.2119.5க்கு விற்கப்படும். கொல்கத்தாவில் ரூ.1870க்கு பதிலாக தற்போது ரூ.2221.5க்கு விற்பனை செய்யபடும். மும்பையில் ரூ.1721ல் இருந்து ரூ.2071.50 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ரூ.1917க்கு கிடைத்த சிலிண்டர் இனி ரூ.2268க்கு கிடைக்கும்.

மார்ச் 1ஆம் தேதி வீட்டு சிலிண்டர் விலை
டெல்லியில் 14.2 கிலோ எடையுள்ள
எல்பிஜி சிலிண்டர் இன்று முதல் ரூ.1053க்கு பதிலாக ரூ.1103க்கு கிடைக்கும். மும்பையில் இந்த சிலிண்டர் ரூ.1052.50க்கு பதிலாக ரூ.1102.5க்கு விற்கப்படும். கொல்கத்தாவில் ரூ.1079க்கு பதிலாக ரூ.1129 ஆகவும், சென்னையில் ரூ.1068.50க்கு பதிலாக ரூ.1118.5 ஆகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், 3 மாநில தேர்தல் முடிந்த நிலையில், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு ரூ.50 உயர்ந்து ரூ.1118.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிகப் பன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.223 உயர்ந்து ரூ.2,2268 விற்பனை செய்யப்படுகிறது. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.