அதிர்ச்சி! தாயின் உதவியுடன் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!!

தாயின் உதவியுடன் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி நியூ அசோக் நகர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை அவரது தாய் படப்பிடிப்புக்கு அழைத்துச்செல்வதாக பட்பர்கஞ்ச் பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு கூட்டிச்சென்றுள்ளார்.

பின்னர் இருவரின் தங்கியிருந்த அறைக்கு தாய்க்கு தெரிந்த நபர் ஒருவர் வந்துள்ளார். மூவரும் அதே அறையில் இருந்த நிலையில், அந்த இளைஞர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அப்போது சிறுமியின் வாயில் துணி வைத்து திணித்து, அவருக்கு அந்த இளைஞர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து சிறுமியை பல்வேறுமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சிறுமி இந்த கொடூர சம்பவம் குறித்து தனது தாத்தாவிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த முதியவர் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்த போலீஸார், சிறுமியின் தாயை கைது செய்து அந்த இளைஞர் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். தலைமறைவாக உள்ள அந்த இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.