அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி ,கடந்த சில தினங்களாக அதிகரித்து வருவதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நேற்று (28) வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதத்திற்கு அமைவாக ,அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை மற்றும் கொள்வனவு விலைகளில் குறிப்படத்தக்க மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. டொலர் ஒன்றின் விற்பனை விலை 366 ரூபாய் 92 சதமாகவும் கொள்வனவு விலை 357 ரூபாய் 68 சதமாக அமைந்திருந்தது..
கடந்த மாதம் 24 ஆம் திகதி டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபாய் 77 சதம் ஆகும். இதன் கொள்வனவு விலை 358 ரூபாய் 45 சதம் ஆகும்.
அரசாங்கத்தின் சர்வதேச நாணயக்கொள்கை ,புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் வெளிநாட்டு நாணயங்களின் அதிகரிப்பு என்பன அதற்கு காரணம் ஆகும். இது மாத்திரம் அன்றி முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் இந்த அதிகரிப்புக்குக் காரணம் .
Mohamed Faizul/AKM