திருமணம் நடைபெற்று இரண்டு நாட்களுக்கு பிறகு, விருந்தில் ஆட்டு இறைச்சி சாப்பிட்ட புதுமாப்பிள்ளை அலர்ஜி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
ஆட்டு இறைச்சி விருந்து
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்ற நபருக்கு கடந்த 23ம் திகதி செல்வி என்ற பெண்ணுடம் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து 24ம் திகதி பிரகாஷ் தனது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு விருந்திற்காக சென்றுள்ளார், அங்கு பரிமாறப்பட்ட ஆட்டு இறைச்சி விருந்தை சாப்பிட்டு விட்டு, கணவன், மனைவி இருவரும் கண்ணவேலம்பாளையம் திரும்பி விட்டனர்.
Getty
நள்ளிரவில் ஏற்பட்ட அலர்ஜி
இந்நிலையில், இரவு நேரத்தில் தூங்கி கொண்டு இருந்த பிரகாஷ்க்கு திடீரென ஒவ்வாமை ஏற்பட்டு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி செல்வி மற்றும் குடும்பத்தினர், அவரை உடனடியாக பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
Photo: S. Siva Saravanan
ஆனால் உடலில் ஏற்பட்ட அலர்ஜி காரணமாக துரதிஷ்டவசமாக பிரகாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறை, பிரகாஷ் ஆட்டு இறைச்சி சாப்பிட்டதால் அலர்ஜி ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.