இந்தூர்,
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்நிலையில், ஆட்டம் தொடங்கிய சிறிது நேரங்களில் பேட்ஸ்மென்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 12 ரன்னிலும், சுக்மன் கில் 21 ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்த புஜாரா 1 ரன்னிலும், ஜடேஜா 4 ரன்னிலும், ஸ்ரேயாஸ் அய்யர் (0) ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
தற்போதைய நிலவரப்படி இந்தியா 69 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. நிதானமாக ஆடி களத்தில் உள்ள விராட் கோலி 21 ரன்னிலும், பரத் 10 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மெதிவ் குஹ்னிமென் 3 விக்கெட்டையும், நாதன் லயன் 2 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.