வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஏதென்ஸ்: கிரீசில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகரத்திற்கு இன்று(பிப்.,01) 350 பயணிகளுடன் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது லரிசா நகரின் தெம்பி பகுதியில் ரயில் சென்றுக் கொண்டிருக்கும் போது, அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தன.
இந்த விபத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணி தொடர்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement