நிதி சுதந்திரத்தை ஒரே வழி நம்மிடமிருக்கும் பணத்தை செல்வமாக மாற்றுவது. அந்த செல்வத்தைப் பல மடங்காகப் பெருக்க உதவக்கூடிய முதலீடுதான் பங்குச் சந்தை முதலீடு. ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கத்துக்குள்ளாகும் பங்குச் சந்தையில் எல்லோராலும் நேரடியாக முதலீடு செய்து செல்வத்தைப் பெருக்க முடியாது. அப்படி நேரடியாகப் பங்குச் சந்தையின் பலனை அடைய முடியாதவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் மியூச்சுவல் ஃபண்ட்.
நம்முடைய முதலீட்டுத் தொகை, வயது, ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் நம்முடைய நிதி இலக்கு ஆகியவற்று ஏற்ற சரியான ஃபண்டைத் தேர்வு செய்து முதலீடு செய்து வந்தால் நம்முடைய ஆசைகளும் கனவுகளும் நிறைவேறாமல் போகாது என்று நிச்சயமாகச் சொல்லலாம். அதற்குமுன் மியூச்சுவல் ஃபண்ட் பற்றியும், சரியான ஃபண்டை தேர்வு செய்வது பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
முதலில் மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் அவசியம். அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான் நாணயம் விகடன் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.
அந்தவகையில் நாணயம் விகடன் மற்றும் மிரே அசெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து சென்னையில் வரும் மார்ச் 12-ம் தேதி பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சியாக மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறது. ‘உங்கள் வாழ்க்கையை வளமாக்கும் குடும்ப நிதித் திட்டமிடல்’ என்ற இந்த நிகழ்ச்சியை வரும் மார்ச் 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை தி.நகர் ஜி.என்.செட்டி ரோட்டில் உள்ள வாணி மஹாலில் நடத்துகிறது.
இந்த நிகழ்ச்சியில் நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன் சிறப்புரை ஆற்றுகிறார். மிரே அசெட் நிறுவனத்தின் ரீடெய்ல் விற்பனை பிரிவின் பிராந்திய தலைவர் சுரேஷ் பாலாஜியும் கலந்துகொண்டு முதலீட்டாளர்களுக்கு உள்ள சந்தேகங்கள் குழப்பங்களுக்கு பதில் அளிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள் அனுமதி இலவசம். பதிவு செய்ய https://bit.ly/3d2WG6G