புதுடெல்லி: தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களும் சிறார்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் குறித்த தேசிய அளவிலான மாநாடு நடைபெற உள்ளது இந்த மாநாட்டில் ஆன்லைன் சிறார் பாலியல் துஷ்பிரயோக பொருட்களின் விளைவுகள் மற்றும் அச்சுறுத்தலை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்து அவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இந்த மாநாட்டில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொள்கிறார்