புதுடில்லி, சிலை திருட்டு தொடர்பான, ௪௧ வழக்குகளின் ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் சிலை திருட்டு தொடர்பான, ௪௧ வழக்குகளில் போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்த வழக்கு ஆவணங்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் சிலை திருட்டில் தொடர்புடையோர் இணைந்து செயல்பட்டுஇருக்கலாம்.
இது தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் போலீஸ் அதிகாரி தலைமையில், சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும். நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என வழக்கு தொடர்ந்தேன்.
ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் இதை நிராகரித்துள்ளது.
இந்த விஷயத்தில், ஓய்வு பெற்ற உயர் போலீஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசின் உள்துறை செயலர், போலீஸ் டி.ஜி.பி.,க்கு, ‘நோட்டீஸ்’ அனுப்ப நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement