சீனா-ரஷ்யா உறவுகளுக்கு ஆணையிட அமெரிக்காவுக்கு உரிமை இல்லை! கொந்தளித்த சீனா


ரஷ்யாவுக்கு உதவினால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா எச்சரித்த நிலையில், எங்களுக்கு ஆணையிட உரிமை இல்லை என சீனா பதிலடி கொடுத்துள்ளது.

சி.ஐ.ஏ இயக்குனர் குற்றச்சாட்டு

கடந்த வெள்ளிக்கிழமை ஊடகத்திடம் பேசிய சி.ஐ.ஏ இயக்குனர் பில் பர்ன்ஸ், ‘உக்ரைனுடனான மோதலில் ரஷ்யாவுக்கு ராணுவ ரீதியாக உதவும் வகையில், ஆபத்தான உபகரணங்களை வழங்க சீனாவின் தலைமை பரிசீலித்து வருவதாக நாங்கள் நம்புகிறோம்’ என குற்றம்சாட்டியிருந்தார்.

ஆனால், அவரது இந்தக் குற்றச்சாட்டை சீனா மறுத்தது. அத்துடன் ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதிக்கான சாத்தியமான சாலை வரைபடத்தை விவரிக்கும் 12 அம்ச திட்டத்தை சீனா வெளியிட்டது.

ஆண்டனி பிளிங்கென் எச்சரிக்கை

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கென் கூறுகையில், ‘ரஷ்யாவுக்கு உதவும் எந்தவொரு சீன நடவடிக்கையும் அமெரிக்க-சீனா உறவுகளுக்கு தீவிரமான சிக்கலை உருவாக்கும். உலகம் முழுவதும் உள்ள சீனாவின் பல அரசியல் உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

உதாரணமாக, எங்கள் தடைகளை மீறும் சீன நிறுவனங்கள் அல்லது தனிநபர்களை குறிவைக்க நாங்கள் தயங்க மாட்டோம்.

ஆண்டனி பிளிங்கென்/Antony Blinken

@Drew Angerer/Getty Images

இந்த பிரச்சனையை நேரடியாக சீன தூதரகத்துடன் விவாதித்தேன். உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு வரும்போது சீனா அதை இரண்டு வழிகளிலும் கொண்டிருக்க முடியாது’ என எச்சரித்துள்ளார்.

சீனா பதிலடி

இந்த நிலையில், சீனா-ரஷ்யா உறவுகளை ஆணையிட அமெரிக்காவுக்கு உரிமை இல்லை என்றும், அமெரிக்காவின் வற்புறுத்தலையும் அழுத்தத்தையும் நாங்கள் ஒருபோது ஏற்க மாட்டோம் என்றும் சீனாவின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் செய்தியாளர்களிடம் கூறினார்.     

மேலும் அவர், அமெரிக்க சட்டவிரோத ஒருதலைபட்ச தடைகளை சீனா உறுதியாக எதிர்க்கிறது.

உக்ரைன் பிரச்சனையில் எங்கள் நிலைப்பாடு தெளிவானது மற்றும் சீரானது. அத்துடன் உக்ரைன் நெருக்கடியின் அரசியல் தீர்வு குறித்து சமீபத்தில் வெளியான சீனாவின் நிலைப்பாட்டில் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

மாவோ நிங்/Mao Ning



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.