அர்ஜென்டினாவில் காணாமல் போன 32 வயது நபர் ஒருவர் சுறா மீனின் வயிற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுறா மீன் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட நபர்
டியாகோ பாரியா(32) என்ற நபர் சமீபத்தில் காணாமல் போனதை தொடர்ந்து அவரை தேடும் பணி விரிவாக நடத்தப்பட்டது, இருப்பினும் அதிகாரிகளால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால் அறிக்கைகளின் படி, டியாகோ பாரியா(32) இறுதியாக பிப்ரவரி 18 அன்று அர்ஜென்டினாவின் தெற்கு சுபுட் மாகாணத்தின் கடற்கரைக்கு அருகில் தனது பைக்கில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
Jam Press
இந்நிலையில் 10 நாட்களுக்கு பிறகு, பாரியாவின் வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு அருகில் இருந்து இரண்டு மீனவர்கள் மூன்று சுறாக்களை பிடித்துள்ளனர். பின் அவர்கள் அந்த சுறாக்களை பிரித்தெடுக்கும் போது அதன் வயிற்றில் இருந்து மனிதன் முன்கை எச்சங்களை கண்டுபிடித்தனர்.
உடனடியாக கடலோர காவல் படை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மீனவர்கள் விவரங்களை தெரிவித்துள்ளனர், இதனடிப்படையில் பாரியாவின் குடும்ப உறுப்பினர்கள் அவரது உடலில் உள்ள தனித்துவமான பச்சை குத்தல் கொண்டு அவரை அடையாளம் கண்டுபிடித்தனர்.
இருப்பினும் எச்சங்கள் அவருடையது தான் என்பதை உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனை நடத்தப்பட உள்ளது.
pixabay
தெளிவான காரணம் இல்லை
இதையடுத்து பாரியாவை தேடும் வழக்கில் உள்ள தலைமை அதிகாரி Daniela Millatruz உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்த தகவலில், மீனவர்கள் சுறாக்களை செய்யும் போது அவற்றில் ஒன்றில் மனித எச்சங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர், இருப்பினும் பாரியா விபத்திற்குள்ளானதாகவே நாங்கள் கருதுகிறோம் என்று குறிப்பிட்டார்.
பாரியா காணாமல் போன வார இறுதியில் வலுவான அலை எழுச்சி இருந்ததாக காவல் துறையின் தலைவர் கிறிஸ்டியன் அன்சால்டோ தெரிவித்துள்ளார்.
மேலும் பாரியா எப்படி தண்ணீரில் மூழ்கினார் என்பது குறித்து எங்களிடம் இரண்டு கருதுகோள்கள் உள்ளன, ஒன்று அவருக்கு காயம் ஏற்பட்டு இருக்க வேண்டும், அல்லது குவாட் சேதத்தால் அவர் கடற்கரையில் மயக்கமடைந்து இருக்கும் போது வலுவான உயர் அலை அவரை இழுத்துச் சென்று இருக்க வேண்டும் என்று சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோஸ் மஸ்ஸே தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுவரை சரியான காரணங்கள் தெளிவாக இல்லை என்றும் அனைத்து காட்சிகளும் இப்போது விசாரிக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.