வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லிக்கு புதிதாக 2 அமைச்சர்களை நியமிக்க, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னருக்கு இன்று(மார்ச் 1) பரிந்துரை செய்துள்ளார்.
புதுடில்லி துணை முதல்வர் பதவியில் இருந்து மணீஷ் சிசோடியா, நேற்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டார்.
மேலும், கெஜ்ரிவால் அமைச்சரவையில் அங்கம் வகித்து வரும் சத்யேந்திர ஜெயின் பணப் பரிமாற்ற மோசடி வழக்கில், கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். இவர் பொறுப்பு வகித்து வந்த இலாகாக்கள், மணீஷ் சிசோடியாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டன. சத்யேந்திர ஜெயின் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார்.
இந்நிலையில், டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சத்தியேந்திர ஜெயினும், தன் அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து, மணீஷ் சிசோடியா பொறுப்பு வகித்து வந்த இலாகாக்கள், ஆம் ஆத்மியை சேர்ந்த வருவாய் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் ஆகியோரிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் சவுரப் பரத்வாஜ், அதிஷி ஆகியோரை புதிய அமைச்சர்களாக நியமிக்க, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னருக்கு இன்று(மார்ச் 1 ) பரிந்துரை செய்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement