தமிழ்நாட்டில் மீண்டும் இடைத்தேர்தல் : ஓபிஎஸ்ஸுக்கு காத்திருக்கும் பேராபத்து -அடித்து ஆடும் எடப்பாடி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரபரப்பே இன்னும் ஓயாத நிலையில் மீண்டும் நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உருவாகி வருவதாக ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.

ஆபத்தை உணராத ஓபிஎஸ்ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு உற்சாகமான நிலையில் அடுத்தடுத்த அடிகளை ஓபிஎஸ் தரப்புக்கு கொடுத்துவிட வேண்டும் என துடிக்கிறது. ஆனால் ஓபிஎஸ் தரப்போ நிலைமையின் தீவிரத்தை உணர்ந்ததாக தெரியவில்லை என்கிறார்கள்.
ஓபிஎஸ் கடிதம்!பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வந்துள்ளதே தவிர பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை என்றொரு காரணத்தை ஓபிஎஸ் தரப்பினர் வைக்கின்றனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் ஓபிஎஸ் ஒரு கடிதம் எழுதினார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்!ஓபிஎஸ் தரப்பின் முயற்சிகள் எதுவும் பலனளிக்காது என்பதை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு ஓபிஎஸ்ஸுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியளிக்கும் வகையில் காய் நகர்த்த தொடங்கி விட்டது. இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று அறிவிப்பு வந்துள்ள நிலையில் உடனடியாக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தி உச்ச பதவியில் விரைவில் அமர வேண்டும் என திட்டமிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அடுத்த வாரம் அறிவிப்பு!அடுத்த வாரமே இது தொடர்பான அறிவிப்பை அதிமுக தலைமைக் கழகம் வெளியிடும் என்கிறார்கள். தேர்தல் அறிவிப்பு, மனு தாக்கல் விவரம், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் என முக்கியமான அறிவிப்பு வெளியாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி மட்டுமே போட்டியிடுவார் என்றாலும் வழக்கமான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறுகிறார்கள் அதிமுக உள் விவகாரம் அறிந்தவர்கள்.
மூன்று எம்.எல்.ஏக்களுக்கு ஸ்கெட்ச்!​​
அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ் உடன் பயணிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கு திமுக ஸ்கெட்ச் போடுவதை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி அவர்களை அதிமுக பக்கம் இழுத்து ஓபிஎஸ்ஸை தனி மரமாக்க முயற்சித்து வருகிறாராம். ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் என நான்கு எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களில் ஓபிஎஸ்ஸை தவிர்த்து மீதமுள்ள மூன்று பேரை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வருவதாக சொல்கிறார்கள்.
18 பேர் தகுதி நீக்கம் நினைவிருக்கிறதா?இது குறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரிக்கும் போது முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய மூவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள். இவர்களது எம்.எல்.ஏ பதவிகளைக் கூட எடப்பாடி பழனிசாமியால் நீக்க முடியும். டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை இழந்தது போல் இப்போதும் கூட ஓபிஎஸ் அணியில் இருப்பவர்கள் தங்கள் பதவியை இழக்க நேரிடலாம் என்கிறார்கள்.
அடித்து ஆடும் பழனிசாமிஅதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி அதற்கான வேலைகளில் இறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே ஓபிஎஸ் மீண்டும் நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்ற பழைய பல்லவியை பாடுவதில் பிரயோசனம் இல்லை. எடப்பாடி பழனிசாமி அடித்து ஆடத் தொடங்கினால் அதை சமாளிக்க ஓபிஎஸ் தரப்பு என்ன செய்து சமாளிக்கும் என்ற கேள்வி உருவாகியுள்ளது.
இடைத்தேர்தல்!​​

ஒருவேளை ஓபிஎஸ் அணியில் உள்ள எம்.எல்.ஏக்களின் பதவிகள் பறிக்கப்பட்டால் மீண்டும் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உருவாகும். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பரபரப்பே இன்னும் குறையாத நிலையில் அடுத்து சில தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் என்றால் தமிழ்நாடு அரசியல் களம் மீண்டும் சூடாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.