திருவாழ்மார்பன் திருக்கோயில், கேரளா மாநிலம், பந்தனம் திட்டா மாவட்டம், திருவல்லவாழ் என்ற ஊரில் அமைந்துள்ளது. கேரளாவிலுள்ள சங்கரமங்கலம் கிராமத்தில் சங்கரமங்கலத்தம்மையார் என்ற பதிவிரதை வாழ்ந்தார். இவர் ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து இந்தக் கோயிலுக்கு வருவார். மறுநாள் துவதாசியன்று இந்தக் கோயிலில் வசிக்கும் துறவிகளுக்கு அன்னதானம் செய்வார். இவர் வரும் வழியிலுள்ள காட்டில் வசித்த தோலாகாசுரன் என்பவன், இந்த அம்மையாரைக் கோயிலுக்கு செல்லவிடாமல், மறைவாக இருந்து, அவருக்குத் தெரியாமல், துன்பம் விளைவித்தான். இதைப் பெருமாளிடம் அம்மையார் முறையிட்டார். […]