தேசிய அரசியலில் கால் பதிக்க ஸ்டாலினை வரவேற்கிறோம்; அகிலேஷ் யாத்வ் பேச்சு.!

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் பிறந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர்
அகிலேஷ் யாதவ்
, பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகிய முக்கிய எதிர்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இன்று மாலை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதனாத்தில் பிறந்த நாள் விழா மாநாடு நடைபெற்றது. எதிர்கட்சி தலைவர்கள் கலந்து அந்த மாநாட்டில் அகிலேஷ் யாதவ் உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, ‘‘முதல்வர் முக ஸ்டாலின் மாநிலத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். முக ஸ்டாலினின் தந்தை கருணாநிதி, தான் ஒரு நாத்திகன் என கூறிக் கொண்ட அதே சமயத்தில் எந்த மதத்திற்கு எதிரானவர் இல்லை என்பதையும் அவரது செயல்பாட்டில் நிருபித்தார். அதேபோல் தான் முக ஸ்டாலினும் செயல்பட்டு வருகிறார். சிங்கார சென்னை உள்ளிட்ட பல முக்கிய நடவடிக்கைகள் அவரால் மேற்கொள்ளப்பட்டது.

எமர்ஜென்சி காலத்தில் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டது, ஜனநாயகத்தின் மீதான் அவரின் போராட்டத்தை காட்டுகிறது. சமூக நீதி மற்றும் சமத்துவம் மீதான முக ஸ்டாலினின் பார்வை பாராட்டத்தக்கது. விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவராக அவர் விளங்குகிறார். 14 வயதில் திமுக இளைஞரணியை உருவாக்கியது அரசியல் மீதான ஸ்டாலினின் ஆர்வத்தை காட்டுகிறது.

அவருடைய ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதற்கு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் மீது அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பல சிறப்பு நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்நாடு கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக போராடியது. குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிதி வழங்கப்பட்டது பாராட்டுக்குரியது. ஸ்டாலின் முதலமைச்சராக ஆன பின்பு அவர் அமல்படுத்திய முக்கிய திட்டமாக, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை பார்க்கிறேன். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள குறைபாடுகள் இதன் மூலம் களையப்பட்டு வருகிறது. அதேபோல் மக்களை தேடி மருத்துவம் திட்டமும் குறிப்பிடப்பட வேண்டியது. மேலும் வேளாண்துறைக்கு என தனியாக நிதிநிலை அறிக்கையும் வெளியிடப்பட்டு வருகிறது.

பெரியார் நினைவிடத்தில் முதல்வர் – தொண்டர்கள் உற்சாகம்!

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராடிய விவசாயிகளை ஒன்றிய அரசு நசுக்கியது. ஆனால் வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து அதை விவசாயிகளுக்கு சமர்ப்பண்ம் செய்தார் முக ஸ்டாலின். எதிர்கால சந்ததியினருக்கு சமூக நீதி குறித்து புரிதல் ஏற்படுத்த முக ஸ்டாலின் மேற்கொண்டு வரும் முயற்சிகளை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.

முக ஸ்டாலின் நல்ல உடல்நலத்துடன், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தனித்தன்மை வாய்ந்த அரசை வழிநடத்த வாழ்த்துகிறோம். தேசிய அரசியலில் எழுச்சியை பெற அவரை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்’’ என அகிலேஷ் யாதவ் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.