வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: புதுடில்லியில், நாளை நடக்கவுள்ள, ‘ஜி – 20’ நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் குயின் காங் பங்கேற்கிறார்.
கிழக்கு லடாக்கில், இந்தியா – சீனா இடையே எல்லை விவகாரம் தொடர்பாக மோதல் வெடித்ததை தொடர்ந்து, இருநாடுகளுக்கு மத்தியில் பதற்றம் நிலவி வருகிறது.
இருதரப்பு தலைவர்களும் பரஸ்பரம் சந்தித்துக் கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜி – 20 அமைப்புகளுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளதை அடுத்து, பல்வேறு துறை சம்பந்தமான பிரதிநிதிகள் கூட்டம், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகின்றன.
இந்த வகையில், ஜி – 20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம், புதுடில்லியில் நாளை நடக்கிறது.
இதில் பங்கேற்க, ஜி – 20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் குயின் காங், கூட்டத்தில் பங்கேற்க புதுடில்லி வருகிறார். இதை சீன வெளியுறவுத் துறை உறுதி செய்துள்ளது.
கடந்த 2019ல், அப்போதைய சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, புதுடில்லி வந்து, நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார். அதன் பின், இந்தியா – சீனா இடையிலான வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு தற்போது நிகழ்கிறது.
அனைவருடனும் இணைந்த பணியாற்ற தயாராக உள்ளதாகவும், பன்முகத்தன்மை, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவை குறித்து இந்த சந்திப்பில் நேர்மறையான பலனை எதிர்பார்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement