புதுடெல்லி: பிஐபியின் புதிய முதன்மை இயக்குனராக மூத்த இந்திய தகவல் சேவை அதிகாரி ராஜேஷ் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். செய்தி தொடர்பு அலுவலகத்தின் இயக்குனராக இருந்த சத்யேந்திர பிரகாஷ் நேற்று ஒன்றிய அரசின் முதன்மை செய்தி தொடர்பாளராக மாற்றப்பட்டார். இதையடுத்து பிஐபியின் புதிய முதன்மை இயக்குனராக ராஜேஷ் மல்கோத்ரா நியமிக்கப்பட்டார். இதே போல் தூர்தர்ஷன் செய்திகள் இயக்குனர் ஜெனரலாக இருந்த மயங்க் அகர்வால் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் பிரியா குமார் புதிய இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.